Latest Updates
-
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்!
சுக்கிர பெயர்ச்சியால் மே 30 முதல் இந்த 3 ராசிக்காரங்க காட்டுல பண மழை பொழியப் போகுது..
Venus Transit In Cancer 2023: வேத ஜோதிடத்தின் படி கிரகங்கள் அவ்வப்போது தங்கள் ராசியை மாற்றும். அப்படி மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் மே 30 ஆம் தேதி சுக்கிரன் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குள் நுழைகிறார்.
நவகிரகங்களில் சுக்கிரன் அழகு, காதல், ஆடம்பரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். சுக்கிரனின் ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் நிதி நிலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதுவும் சுக்கிரன் சந்திரனின் ராசிக்குள் நுழைந்திருப்பதால், சில ராசிக்காரர்கள் பொருளாதார ரீதியாக அற்புதமான பலன்களைப் பெறப் போகிறார்கள். சொல்லப்போனால் சில ராசிக்காரர்கள் சுக்கிரனின் அருளால் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறவுள்ளார்கள். இப்போது கடகம் செல்லும் சுக்கிரனால் எந்த ராசிக்காரர்கள் நிதி ரீதியாக சிறப்பான பலனைப் பெறவுள்ளார்கள் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நிதி ரீதியாக மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள். பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். புத்திசாலித்தனத்தால் நிறைய பணத்தை சம்பாதிப்பீர்கள். வியாபாரிகள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். கூட்டு தொழில் செய்பவர்கள் இரட்டிப்பு லாபத்தைப் பெறுவார்கள். சமூகத்தில் உங்கள் குடும்பத்தின் நிலை உயரும். காதலிப்பவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும்.
கடகம்
கடக ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் திடீர் பண வரவு அதிகரிக்கும், வருமானம் பெருகும். சுக்கிரனின் அருளால் நடத்தையில் முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் உங்கள் வார்த்தைகளுக்கு நல்ல மதிப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளுடனான உறவு மேம்படும். வியாபாரிகள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள் மற்றும் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
கன்னி
கன்னி ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலம் கன்னி ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலைத் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. சுக்கினின் அருளால் பணம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். சமூகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications