Latest Updates
-
இந்திய பிரதமர், ஜனாதிபதி மற்றும் முதலமைச்சர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இவ்வளவு கம்மியா? -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
தினமும் வீட்டில் கற்பூரத்துடன் பிரியாணி இலை சேர்த்து எரிங்க.. அப்புறம் நடக்குறத பாருங்க.. ஆச்சரியப்படுவீங்க.. -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த நெல்லை ஸ்டைல் கொத்சை ட்ரை பண்ணுங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிகள் எல்லோரையும் அவங்க கட்டுப்பாட்டில் வைத்து ஆட்டி படைப்பவர்களாக இருப்பார்களாம் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பாரம்பரிய நெய் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
சுக்கிர பெயர்ச்சியால் ஆகஸ்ட் 7 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் செல்வம் பெருகப் போகுது..
Venus Transit In Cancer On August 2023: வேத ஜோதிடத்தில் சுக்கிரன் மிகவும் முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது. ஏனெனில் சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு, சந்தோஷம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். சுக்கிரன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் தான், அனைத்துவிதமான சந்தோஷமும் கிடைக்கும் மற்றும் நிதி நிலை சிறப்பாக இருக்கும்.
மங்களகரமான கிரகமாக கருதப்படும் சுக்கிரன், ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். சுக்கிரன் ராசியை மாற்றுவதற்கு சுமார் 23 நாட்கள் ஆகும். மேலும் சுக்கிரன் ஒவ்வொரு முறை ராசியை மாற்றும் போதும், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

அந்த வகையில் சுக்கிரன் ஆகஸ்ட் 07 ஆம் தேதி சந்திரன் ஆளும் கடக ராசிக்குள் நுழையவுள்ளார். சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் சில ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கப் போகிறது. இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆடம்பரம் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். இதுவரை பண பிரச்சனைகளை சந்தித்து வந்தால், ஆகஸ்ட் 07 ஆம் தேதிக்கு பின் அப்பிரச்சனை நீங்கி, நிறைய பணம் சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். திடீரென பண வரவு அதிகரிக்கும். சிக்கிய பணம் கிடைக்கும். அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும்.
பரம்பரை சொத்துக்கள் இக்காலத்தில் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகள் ஆதரவாக இருப்பார்கள். பணிபுரிபவர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
கடகம்
கடக ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் நற்பலனைப் பெறுவார்கள். திடீரென்று நிறைய பணம் சம்பாதிக்கும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். இக்காலத்தில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
இக்காலத்தில் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்கள். இக்கால கட்டத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். காதலித்து வந்தால், காதல் வாழ்க்கை மிகவும் ரொமான்டிக்காக இருக்கும். திருமண வாழ்க்கையும் இனிமையாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications