Latest Updates
-
சுரைக்காய் தோசையும்.. முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
இன்றைய ராசிபலன் 16 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நஷ்டமும், சவால்களும் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சூரியன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், வெற்றிகளையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
1 கப் மீல் மேக்கர் இருந்தா இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - சாதம், சப்பாத்தி எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசி குழந்தைகள் படிப்பில் கெட்டிக்காரர்களாக பெரிய சாதனையாளர்களாக வருவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முட்டை சால்னாவை செஞ்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு டக்கரா இருக்கும் -
மின்விசிறிகளில் ஏன் எப்போதும் மூன்று இறக்கைகள் மட்டுமே உள்ளது தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
1 கப் பாஸ்மதி அரிசி இருந்தா இந்த காஷ்மீர் பேமஸ் யக்னி புலாவை செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
ஜூலை 16-ல் நிகழும் சூரியன்-சந்திரன் அரிய சேர்க்க: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்க போகுதாம் - உங்க ராசி என்ன? -
இந்த அறிகுறிகளில் ஒன்று உங்கள் வீட்டில் இருந்தாலும் நீங்க பணக்கஷ்டத்தில் சிக்க போறீங்களாம் - சாணக்கிய தந்திரம்
சுக்கிரனின் அருளால் இன்று முதல் இந்த ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கப் போகுது...
Venus Transit In Cancer On August 2023: வேத ஜோதிடத்தின் படி, அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால், அந்நபர் நல்ல செழிப்பான வாழ்க்கையை வாழ்வதோடு, ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வார். இந்த சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார்.
இந்த சுக்கிரன் ஜூலை 07 ஆம் தேதி சிம்ம ராசிக்குள் நுழைந்தார். அதன் பின் ஜூலை 25 ஆம் தேதி சிம்ம ராசியில் வக்ர நிலையில் பின்னோக்கி பயணிக்கத் தொடங்கினார்.

இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி சுக்கிரன் கடக ராசியை அடைந்தார். இப்படி வக்ர நிலையில் கடக ராசியை அடைந்த சுக்கிரனின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இப்போது கடகம் சென்றுள்ள சுக்கிரனால் 12 ராசிக்காரர்களும் பெறும் பலன்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.
மேஷம்
மேஷ ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் நிலம்-சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீர்க்கப்படும். வீடு அல்லது வாகனம் வாங்க விரும்பினால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். ஆடம்பரமான பொருட்களை வாங்கி மகிழ்வார்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். இக்காலத்தில் உங்கள் திட்டங்களை ரகசியமாக வைத்து செயல்பட்டால் வெற்றி பெறலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் கடினமான சூழ்நிலைகளையும் எளிதில் சமாளிப்பார்கள். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு மேம்படும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். தொண்டுகளில் நாட்டம் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்புக்காக வெளிநாடு செல்ல முயற்சி செய்தால், இக்காலத்தில் நல்ல வாய்ப்பு கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும். ஆடம்பரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். சிக்கிய பணம் இக்காலத்தில் கிடைக்கும். பேச்சால் எப்பேற்பட்ட சூழ்நிலைகளையும் திறம்பட எதிர்கொள்வீர்கள். காதல் திருமணம் செய்ய நினைத்தால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.
கடகம்
கடக ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வெளியூர் பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்தும் நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் ஆடம்பரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிநாடு செல்ல விரும்பினால், இக்காலத்தில் நல்ல முடிவு கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கண் தொடர்பான பிரச்சனைகளில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. திருமண வாழ்க்கையில் கசப்பு ஏற்பட விடாதீர்கள். திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தைகளில் சற்று தாமதம் ஏற்படும். உங்கள் திட்டங்களை ரகசியமாக வைத்து செயல்பட்டால், நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
கன்னி
கன்னி ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் நிதி நிலை வலுவாகும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடனான உறவும் வலுவாக இருக்கும். இந்தக் காலக்கட்டத்தில் ஏதேனும் பெரிய வேலைகளைச் செய்ய வேண்டியிருந்தாலோ அல்லது புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டியிருந்தாலோ, இக்காலம் சாதகமாக இருக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இக்காலம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும. நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். சமூகத்தில் உங்கள் கௌரவம் அதிகரிக்கும். கூட்டுத் தொழில் செய்ய வாய்ப்பு கிடைக்கும். இக்காலத்தில் எந்த ஒரு முடிவையும் கவனமாக எடுங்கள். வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை செய்ய விரும்பினால், இக்காலத்தில் நல்ல வாய்ப்பு கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலமானது அனைத்து வகையிலும் சாதகமாக இருக்கும். வீழ்த்த முயன்றவர்கள் உதவ முன்வருவார்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். குழந்தை தொடர்பான கவலைகள் நீங்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுபகாரியங்கள் இக்காலத்தில் நடக்கலாம். மொத்தத்தில், இக்காலம் அனைத்து வகையிலும் சாதகமாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலம் அவ்வளவு நன்றாக இருக்காது. காதல் விஷயங்களில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கியமும் மோசமாக இருக்கும். பிடிவாதத்தையும், உற்சாகத்தையும் கட்டுக்குள் வைத்திருந்தால், வெற்றி கிடைக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும். சிக்கிய பணம் திரும்ப கிடைக்கும்.
மகரம்
மகர ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் அனைத்து விஷயங்களிலும் வெற்றி கிடைக்கும். இக்காலத்தில் எந்த ஒரு பெரிய வேலையை தொடங்குவதாக இருந்தாலும், உடனே முடிவெடுத்து தொடங்குங்கள். இக்காலத்தில் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். எந்த ஒரு வாய்ப்பையும் நழுவவிடாதீர்கள். மாணவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலம் சற்று கலவையாக இருக்கும். இக்காலத்தில் உங்களின் வேலைகளில் தடைகள் ஏற்பட்டாலும், இறுதியில் வெற்றிகரமாக முடிப்பீர்கள். எந்த பிரச்சனைகளையும் பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. எதிரிகளிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அவர்கள் உங்கள் வீழ்த்திவிடுவார்கள். இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு செயலையும் முடிவையும் மிகவும் கவனமாக எடுக்க வேண்டும். அதிகம் உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் இழப்பை மட்டுமே சந்திக்க நேரிடும்.
மீனம்
மீன ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலமானது வரப்பிரசாதகமாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உயர் அதிகாரிகளுடனான உறவு வலுபெறும். மாணவர்களுக்கு சிறப்பாக இருக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications