Latest Updates
-
கடக ராசியில் அஸ்தமனமாகும் குரு பகவான்: இன்று முதல் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வீட்டுல காய்கறி எதுவும் இல்லையா? மீல் மேக்கர் வெச்சு இந்த வெள்ளை சால்னா செய்யுங்க.. அள்ளும்.. -
வெயிலால் கருப்பாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப தக்காளியை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது... -
பீட்ரூட்டை இந்த ஸ்டைலில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
உங்ககிட்ட இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப உங்களுக்கு இன்சுலின் எதிர்ப்பு இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார்.. -
Aani Amavasya 2026: ஆனி அமாவாசையான இன்று இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த கஞ்சியை வாரம் 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடையும் குறையும், சுகருக்கும் நல்லது.. -
இன்றைய ராசிபலன் 14 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப பதட்டமான நாளாக இருக்கப்போகுதாம் -
ஜூலை 16-ல் சூரிய-சந்திரனின் பரிவர்த்தன யோகம்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது!
சுக்கிரனின் அருளால் இன்று முதல் ஜூலை 7 வரை இந்த ராசிக்காரர்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்கப் போகுது!
Venus Transit in Cancer 2023: ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் கிரகங்கள் தங்களின் ராசியை மாற்றும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.
நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ராசியை மாற்றும். அந்த வகையில் நவகிரகங்களில் அழகு, காதல், ஆடம்பரம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் சுக்கிரன் மே 30 ஆம் தேதி சந்திரன் ஆளும் கடக ராசிக்குள் நுழைகிறார்.

இந்த கடக ராசியில் சுக்கிரன் 2023 ஜூலை 07 ஆம் தேதி வரை இருந்து, சூரியன் ஆளும் சிம்ம ராசிக்குள் நுழைவார். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால், அவர் செல்வ செழிப்போடு, நல்ல ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வார் மற்றும் காதல் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்.
இந்நிலையில் கடக ராசிக்கு சுக்கிரன் நுழைவதால் 12 ராசிக்காரர்களுக்கும் ஜூலை 07 வரை எப்படி இருக்கும் என்பதை இப்போது காண்போம். உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம்
மேஷ ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் உறவுகளில் விரிசல் ஏற்படும் மற்றும் உங்களின் பல முக்கியமான வேலைகளும் கெட்டுப் போக வாய்ப்புள்ளது. காதலித்துக் கொண்டிருப்பவர்கள் சற்று நிதானத்தைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறது. பணியிடத்தில் பதவி உயர்வு பெற விரும்பினால், வேலையில் முழு கவனம் செலுத்த வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் படைப்பு துறையில் இருப்பவர்கள் நல்ல வெற்றியைக் காண்பார்கள். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வாழ்க்கைத் துணையுடனான உறவுகள் வலுவாகும் வாய்ப்புள்ளது. முக்கியமாக நண்பர்களுடன் நல்ல தரமான நேரத்தை செலவிடும் வாய்ப்புக்கள் கிடைக்கும். தொழிலதிபர்கள் வெற்றி பெறுவார்கள்.
மிதுனம்
மிதுன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் இக்காலத்தில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவைப் பெறுவார்கள். இக்காலத்தில் சந்திக்கும் பிரச்சனைகளை பொறுமையாக கையாண்டால் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால், அவற்றை முடிந்த வரை சரிசெய்து, வீட்டில் அமைதியை நிலைநாட்ட முயற்சி செய்வீர்கள். பணிபுரிபவர்கள் பதவி உயர்வைப் பெறலாம். வணிகர்களுக்கும் நல்ல லாபம் கிடைக்கும். காதல் உறவுகள் மேம்படும்.
கடகம்
கடக ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் இக்காலத்தில் தங்களின் அழகில் அதிக கவனத்தை செலுத்துவார்கள். இக்காலகட்டத்தில் மன உறுதி அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களின் தொழில் நிலை மேம்படும். அலுவலகத்தில் உங்கள் பேச்சை மற்றவர்கள் கேட்பார்கள். தொழிலதிபர்களும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காண்பார்கள். உங்களுக்கும் உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் இடையே காதல் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் அதிக பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. உங்கள் பணத்தை சேமிக்கவும், உங்கள் நிதி நிலையை மேம்படுத்தவும் தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும். திருமண வாழ்வில் காதல் அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே விரிசல் ஏற்படலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கண் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கலாம்.
கன்னி
கன்னி ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் முன்னேற்றத்திற்கான சில வாய்ப்புக்கள் கிடைக்கும். உங்கள் ஆசைகள் நிறைவேறும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். தொழிலதிபர்கள் குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவார்கள். உடன்பிறப்புகளின் ஆதரவும் கிடைக்கும். இக்காலத்தில் பணத்தை சேமித்து வைக்க முயற்சித்தால், பிரச்சனையின் போது அப்பணம் உதவியாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் பணியிடத்தில் அரசியலில் ஈடுபடாதீர்கள். இல்லாவிட்டால், சக நண்பர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடனான உறவு பாதிக்கப்படும். பணியிடத்தில் நல்ல உறவைப் பேண வேண்டும், அது பதவி உயர்வுக்கு வழிவகுக்கும். தொழிலதிபர்கள் எந்த ஒரு முயற்சியையும் கவனமாக எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். தந்தையுடனான உறவு பாதிக்கப்படும். ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலமானது சாகசங்கள் நிறைந்ததாக இருந்தாலும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். வேலை தொடர்பான பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புள்ளது. இருப்பினும் பயணம் மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆன்மீக பயணத்திற்கான வாய்ப்புள்ளது. கலைத் தொழிலில் இருப்பவர்கள் நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
தனுசு
தனுசு ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். பணியிடத்தில் பெண் ஊழியர்களிடம் மரியாதையாக நடந்த கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். வணிகர்கள் தங்கள் கூட்டாளர்களுடன் நல்ல உறவைப் பேண வேண்டும். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
மகரம்
மகர ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் திருமண வாழ்வில் காதல் அதிகரிக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தை காண்பார்கள். இருப்பினும் சற்று கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்கள் கடமைகளை நிறைவேற்ற வாய்ப்பு கிடைக்கும். இக்காலத்தில் உங்களுக்கு வெற்றி கிடைக்க வேண்டுமானால், உங்கள் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும்.
கும்பம்
கும்ப ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் பணியிடத்தில் உங்கள் எதிரிகள் உங்களுக்கு எதிராக சதி செய்யலாம். நீங்கள் இக்காலத்தில் வெற்றி காண விரும்பினால், உங்கள் வேலையில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கிய விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தொழிலதிபர்கள் வளர்ச்சி காண சில தடைகளை கடக்க வேண்டும். சொத்து விஷயத்தில் வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டும். புது விஷயங்களை மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
மீனம்
மீன ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் காதல் வாழ்க்கை செழிக்கும். வாழ்க்கைத் துணையுடன் போதுமான நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. மாணவர்கள் தேர்வில் சிறப்பாக செயல்படுவார்கள். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையை மாற்ற நினைக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications