Latest Updates
-
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்!
சுக்கிர பெயர்ச்சியால் மே 30 முதல் இந்த 3 ராசிக்காரங்க பண பிரச்சனைகளை சந்திக்கப் போறாங்க...
Venus Transit In Cancer 2023: நவகிரகங்களில் ஆரம்பரம், செல்வம், செழிப்பு, காதல், அழகு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் தற்போது மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் மே 30 ஆம் தேதி சுக்கிரன் மிதுனத்தில் இருந்து கடக ராசிக்குள் செல்கிறார்.
இந்த கடக ராசியில் சுக்கிரன் ஜூலை 7 ஆம் தேதி வரை இருந்து, பின் சிம்ம ராசிக்குள் நுழைவார். ஒருவர் நல்ல செல்வ செழிப்போடு இருக்க வேண்டுமானால், ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருக்க வேண்டும். இந்த சுக்கிரன் அவ்வப்போது ராசியை மாற்றுவார்.

அப்படி மாற்றும் போது, அது ஒருவரது செல்வ நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால், சில ராசிக்காரர்கள் நற்பலனையும், இன்னும் சில ராசிக்காரர்கள் சற்று மோசமான பலன்களையும் பெறலாம்.
இப்போது 2023 மே 30 ஆம் தேதி சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் எந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், யாரெல்லாம் பண பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
துலாம்
துலாம் ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்களின் அலுவலகத்தில் கவனமாக இருக்க வேண்டும். அலுவலக அரசியலில் தலையிடாமல் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். மேலும் பணிபுரிபவர்கள் உயர் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதால், கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதால், கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
தனுசு
தனுசு ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது. அதிக மன அழுத்தத்திற்கு ஆளாவீர்கள். வாழ்வில் பல கஷ்டங்களை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலை முழு கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் பெரிய பிரச்சனையை சந்திக்க நேரிடும். நிதி நிலை சற்று மோசமாக பாதிக்கப்படும். செலவுகளை கவனிக்காவிட்டால், பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
கும்பம்
கும்ப ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்காமல் அவதிப்படக்கூடும். உடன் பணிபுரிபவர்களுக்கு எதிராக சதி செய்வதைத் தவிர்த்திடுங்கள். ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. சொத்து பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. இக்காலத்தில் வாக்குவாதத்தில் இருந்து விலகி இருங்கள். இல்லாவிட்டால் உங்கள் வாழ்க்கை மோசமாகிவிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications