Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
சுக்கிர பெயர்ச்சியால் ஏப்ரல் 24 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கப்போகுது..
Venus Transit In Aries On 24 April 2024: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும். அப்படி ராசியை மாற்றும் போது அதன் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்படும். நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன்.
இந்த சுக்கிரன் ஆடம்பரம், அழகு, காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். சுக்கிரன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், அந்நபர் நல்ல செழிப்பான மற்றும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வார். இப்படிப்பட்ட சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். இந்த சுக்கிரன் தற்போது மேஷ ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் ஏப்ரல் 24 ஆம் தேதி சுக்கிரன் மேஷ ராசிக்குள் நுழைகிறார். மேஷ ராசியில் சுக்கிரன் நுழைவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்துடன் நிதி நன்மைகளையும் பெறவுள்ளனர். இப்போது மேஷ ராசிக்கு செல்லும் சுக்கிரனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
மகர ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இநத ராசிக்காரர்களின் வசதிகள் அதிகரிக்கும். தொழிலில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். முக்கியமாக நல்ல முன்னேற்றத்துடன், லாபத்தையும் பெறக்கூடும். வியாபாரிகள் முதலீடுகளில் நல்ல நன்மைகளைப் பெறுவார்கள். வாகனம் ம்ற்றும் சொத்து வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொடர்பான தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். தொழிலதிபராக இருந்தால், நல்ல நிதி ஆதாயங்களைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். இதுவரை பணப் பிரச்சனைகளை சந்தித்து வந்தால், அப்பிரச்சனை நீங்கும். திருமணமானவராக இருந்தால், வாழ்க்கைத் துணையுடனான உறவு மேம்படும். பணிபுரிபவர்கள் சிறப்பான செயல்திறன் மற்றும் கடின உழைப்புக்கான பலனைப் பெறுவார்கள். அதாவது, பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்க வாய்ப்புள்ளன.
சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் ஏப்ரல் 24 முதல் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் ஆதரவாக இருக்கும். தொழிலில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பயணம் மேற்கொள்ள நேரிடும். குடும்பத்தினருடனான உறவு வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். சுப காரியங்களில் அதிகம் பங்கேற்க நேரிடும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வருமானத்தில் உயர்வு ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications