சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...

Venus Transit in Aquarius 2024: நவகிரகங்களில் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அசுரர்களின் குருவாக கருதப்படுகிறார். சுக்கிரனின் ஆசி இருந்தால், செல்வம் பெருகும், ஆடம்பரமான வாழ்க்கையை வாழலாம் மற்றும் காதல் வாழ்க்கையும் இனிமையாக இருக்கும்.

இப்படிப்பட்ட சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். சுக்கிரன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர். தற்போது சுக்கிரன் மகர ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் மார்ச் 07 ஆம் தேதி சனி பகவானின் ராசியான கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார். சனியும், சுக்கிரனும் நட்பு கிரகங்களாகும்.

Venus Transit In Aquarius On 07 March 2024 Effects On 12 Zodiac Signs In Tamil

எனவே சனியின் ராசிக்குள் சுக்கிரன் செல்வது சிறப்பான பலன்களைத் தரும். கும்பம் செல்லும் சுக்கிரனின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே தெரியும். எனவே மார்ச் மாதத்தில் நிகழும் சுக்கிர பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதை இப்போது காண்போம்.

மேஷம்

மேஷ ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிப்பதோடு மட்டுமின்றி, நீண்ட காலமாக சிக்கியிருந்த பணமும் கைக்கு வந்து சேரும். மாணவர்களுக்கு இப்பெயர்ச்சியானது சிறப்பாக இருக்கும். திட்டங்களை ரகசியமாக வைத்துக்கொண்டு வேலை செய்தால் வெற்றி பெறலாம். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் அரசு வேலையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தால், நல்ல செய்தியை இப்பெயர்ச்சிக்கு பின் பெற வாய்ப்புள்ளது. பரம்பரை சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகள் தீரும். வீடு, வாகனம் வாங்க நினைத்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். உங்களை அவமானப்படுத்த நினைத்தவர்கள் இக்காலத்தில் உங்களுக்கு உதவுவார்கள்.

மிதுனம்

மிதுன ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் ஆதரவாக இருப்பதோடு, ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். எடுக்கும் முடிவுகள் மற்றும் செய்யும் வேலைகள் பாராட்டப்படும். தொண்டுகளில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது. வெளியூர் மற்றும் வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் உள்ளன.

கடகம்

கடக ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. எதிர்பாராத பணம் கிடைக்க வாய்ப்பு உண்டு. பரம்பரை சொத்து தொடர்பான பிரச்னைகள் தீரும். உங்கள் திட்டங்களை ரகசியமாக வைத்துக்கொண்டு வேலை செய்தால் அதிக வெற்றி பெறுவீர்கள்.

சிம்மம்

சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அனைத்து வகையிலும் சிறப்பாக இருக்கும். திருமண வாழ்வில் இனிமை இருக்கும். காதலிப்பவர்கள் திருமணம் செய்ய நினைத்தால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெற வாய்ப்புகள் உள்ளன. விருந்தினர்களின் வருகையால் வீட்டின் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும்.

கன்னி

கன்னி ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பல ஏற்ற தாழ்வுகளை சந்திக்க வேண்டி வரும். ரகசிய எதிரிகள் அதிகரிப்பர். சர்ச்சைக்குரிய விஷயங்களில் இருந்து விலகி இருங்கள். உடல்நலம் தொடர்பான கவலைகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். யாருக்கும் அதிக கடன் கொடுக்க வேண்டாம், இல்லையெனில் நீங்கள் நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும்.

துலாம்

துலாம் ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசியைச் சேர்ந்த மாணவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கம். ஏதேனும் பெரிய வேலையைத் தொடங்க அல்லது ஒப்பந்தத்தில் கையெழுத்திட விரும்பினால், அதற்கு இக்காலம் நன்றாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். குழந்தைகள் தொடர்பான கவலைகள் நீங்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நண்பர்கள், உறவினர்கள் மூலம் நல்ல செய்திகளைப் பெறுவார்கள். பெற்றோரின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் தீரும். வாகனம் வாங்க விரும்பினால் அதற்கான வாய்ப்பு கிடைக்கும். அரசின் முழு ஆதரவு கிடைக்கும். சமூக அந்தஸ்தும் கௌரவமும் உயரும். சில காரணங்களால் மன உளைச்சல் ஏற்படும்.

தனுசு

தனுசு ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆற்றல் அதிகரிக்கும். எடுக்கும் எந்த முடிவும் சமூகத்தில் பாராட்டப்படும். அரசியலில் இருப்பவர்கள் தேர்தல் தொடர்பான எந்த முடிவையும் எடுக்க விரும்பினால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். வேலை தொடர்பான வெளியூர் பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். உங்கள் திட்டங்களை ரகசியமாக வைத்து செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.

மகரம்

மகர ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வலுபெறும். நீண்ட நாட்களாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பேச்சைக் கட்டுப்படுத்திக் கொண்டு செயல்பட்டால் வெற்றியடைவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வயிறு தொடர்பான பிரச்சனைகள் மற்றும் வலது கண் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

கும்பம்

கும்ப ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் எந்த ஒரு பெரிய வேலையைத் தொடங்கினாலும் அதில் நல்ல வெற்றி கிடைக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தத்தைப் பெறுவார்கள். ஆடம்பர பொருட்கள் மற்றும் பயணங்களுக்கு அதிக செலவுகள் ஏற்படும். அரசு தொடர்பான வேலைகளில் வெற்றி கிடைக்கும். திருமண பேச்சுக்கள் வெற்றியடையும்.

மீனம்

மீன ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பயணங்களுக்கு அதிக செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இடது கண் தொடர்பான பிரச்சினைகளால் அவதிப்பட நேரிடும். எந்த பிரச்சனைகளையும் பேசி தீர்க்க முயற்சிக்க வேண்டும். நண்பர்கள், உறவினர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்புள்ளது. பயணம் மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. எதிர்பார்த்த வேலைகள் வெற்றிகரமாக நிறைவேறும். அதிகப்படியான செலவைக் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

Desktop Bottom Promotion