Latest Updates
-
இன்றைய ராசிபலன் 19 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தமான நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க.. -
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள் -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும் -
சப்பாத்திக்கு இந்த ப்ளைன் குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க.. -
விபூதியை நெற்றியில் எப்படி வைக்க வேண்டும்? நெற்றியில் விபூதி வைப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா? -
Vastu Tips: வீட்டில் பணம் அதிகமா சேரணுமா? அப்ப வீட்டுல இந்த செடியை வாங்கி வையுங்க.. -
குப்பையை பணம் கொடுத்து இறக்குமதி செய்யும் வினோத நாடு - எந்த நாடு? ஏன் இப்படி செய்கிறது தெரியுமா? -
ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
செப்டம்பரில் சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் யார் தெரியுமா?
மிருகசீரிஷம் செல்லும் சுக்கிரன்: இன்னும் 2 நாட்களில் இந்த 3 ராசிக்காரர்களின் நிதி நிலை உயரப்போகுது..
Venus Transit 2024 In Mirugasirisham Nakshatra: வேத ஜோதிடத்தில் சுக்கிரன் மிகவும் சிறப்பு வாய்ந்தவர். என்ன தான் சுக்கிரன் அசுரர்களின் குருவாக இருந்தாலும், இவர் செல்வம், அழகு, காதல், ஆடம்பரம் ஆகியவற்றின் காரணியாவார். ஒருவரது நிதி நிலை, தோற்றம் சிறப்பாக இருக்க வேண்டுமானால், அதற்கு சுக்கிரன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.
சுக்கிரனானவர் 30 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர் மற்றும் அவ்வப்போது ராசியையும் மாற்றுவார். தற்போது சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷப ராசியில் பயணித்து வருகிறார் மற்றும் ரோகிணி நட்சத்திரத்தில் உள்ளார். இந்நிலையில் சுக்கிரன் வருகிற ஜூன் 07 ஆம் தேதி மிருகசீரிஷம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த நட்சத்திரத்தில் ஜுன் 18 ஆம் தேதி வரை இருப்பார்.

மிருகசீரிஷம் நட்சத்திரமானது 27 நட்சத்திரங்களில் 5 ஆவது நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய் ஆவார். சுக்கிரன் செவ்வாயின் நட்சத்திரத்திற்குள் நுழைவதால், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது மிருகசீரிஷ நட்சத்திரத்திற்கு சுக்கிரன் செல்வதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியானது மிதுன ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களை வழங்கும். சிலர் நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள நேரிடும். தொழில் ரீதியாக சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படுவதோடு, நல்ல நிதி நன்மைகளும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த அளவில் லாபம் கிடைக்கும். இக்காலத்தில் சொந்தமாக தொழில் தொடங்கினால், நல்ல லாபத்தைப் பெறலாம். பண வரவு சிறப்பாக இருக்கும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும்.
கன்னி
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியானது கன்னி ராசிக்காரர்களுக்கு நல்ல நிதி நன்மைகளை வழங்கவுள்ளது. பணியிடத்தில் உங்களின் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். இதனால் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்களும் உள்ளன. வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு இருப்பதால், ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். வணிகர்கள் இரட்டிப்பு லாபத்தைப் பெறுவார்கள். நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். பல வழிகளில் இருந்து பணம் உங்களைத் தேடி வரும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
கும்பம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியானது கும்ப ராசிக்காரர்களுக்கு நல்ல பொருள் இன்பத்தை அளிக்கப் போகிறது. தொழிலைப் பொறுத்தவரை, ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைப்பதற்கான வலுவான வாய்ப்புள்ளது. வியாபாரிகளும் அதிக லாபத்தைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் சிறப்பான செயல்திறன் காரணமாக சம்பள உயர்வைப் பெறலாம். இக்காலத்தில் வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் தீரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications