Latest Updates
-
மின்சாரமே இல்லாத காலத்தில் முகலாய மன்னர்களுக்கு எப்படி ஐஸ்கட்டிகள் கிடைத்தது தெரியுமா? இப்படித்தானாம் -
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த பால் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
உடுப்பி ஸ்டைலில் சாம்பார் சாப்பிட்ருக்கீங்களா? இந்த பக்குவத்தில் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணம் சம்பாதிக்க கஷ்டப்படுவாங்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
பூண்டும், கறிவேப்பிலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சுக்கிரன் சனிபகவான் ஆளும் நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுதாம் -
எந்த ஆரோக்கிய பிரச்சனைக்கு எந்தப் பழம் சிறந்தது? விளக்கும் டாக்டர்.சிவகுமார்! -
சாணக்கிய நீதி படி இந்த 6 நபர்கள் உங்களுக்கு எதிரியானால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாதாம் - ஜாக்கிரதை -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது..! -
1 கப் தேங்காயும், 1 கைப்பிடி புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்..
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை பொழியப் போகுது...
Venus Transit 2024 In Kritikai Nakshatra: வேத ஜோதிடத்தில் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியையும், நட்சத்திரத்தையும் மாற்றுவார். அப்படி மாற்றும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
தற்போது சுக்கிரன் மேஷ ராசியிலும், பரணி நட்சத்திரத்திலும் பயணித்து வருகிறார். இந்நிலையில் மே 16 ஆம் தேதி சுக்கிரன் கிருத்திகை நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். இந்த நட்சத்திரத்தில் மே 27 ஆம் தேதி வரை இருப்பார். கிருத்திகை நட்சத்திரத்தின் அதிபதி சூரியன். இந்த கிருத்திகை நட்சத்திரம் 27 நட்சத்திரங்களில் 3 ஆவது நட்சத்திரமாகும்.

சுக்கிரனின் இந்த நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு சிறப்பாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கும். முக்கியமாக இந்த சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியினால் 3 ராசிக்காரர்களின் மரியாதை மற்றும் மன உறுதி அதிகரிக்கும். அதோடு அதிர்ஷ்டத்தின் ஆதரவால் நிதி நன்மைகளும் கிடைக்கும். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் செயல்திறனை பாராட்டுவதோடு, சம்பள உயர்வை வழங்குவார்கள். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நதி நிலை வலுவடையும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். உறவுகளைப் பொறுத்தவரை, வாழ்க்கைத் துணையுடனான உறவு நன்றாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியானது வாழ்க்கையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக தொடங்கப்பட்டு வெற்றியடையும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். நீண்ட நாட்களாக சந்தித்து வந்த பண பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வணிகர்களுக்கு புதிய சலுவை கிடைக்கும். உறவுகளைப் பொறுத்தவரை இனிமையாக இருக்கும். நீண்ட நாட்களாக மனதில் இருந்த கவலைகள் நீங்கும்.
மகரம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியானது மகர ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களை வழங்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். பொருள் இன்பம் கிடைக்கும். பணியிடத்தில் இலக்கை எளிதில் அடைவதோடு, நல்ல நிதி நன்மைகளும் கிடைக்கும். வேலை தொடர்பாக நிறைய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களைத் தருவதாக இருக்கும். சிலருக்கு புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகளிடம் இருந்து நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications