Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
10 ஆண்டுகளுக்கு பின் ரிஷபத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கபோகுது..
Sukraditya Rajyog: வேத ஜோதிடத்தில் கிரகங்கள் ராசியை மாற்றும் போது சில சமயங்களில் ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே ராசியில் இணைந்து பயணித்து, சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அந்த வகையில் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் மே 14 ஆம் தேதி மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு செல்லவுள்ளார்.
அதைத் தொடர்ந்து மே 19 ஆம் தேதி அசுரர்களின் தலைவனும், செல்வத்தின் காரணியாகவும் கருதப்படும் சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷப ராசிக்கு செல்லவுள்ளார். இதனால் ரிஷப ராசியில் சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த யோகமானது சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் உருவாகவுள்ளது.

இதனால் சில ராசிக்காரர்களுக்கு பொற்காலமாக இருக்கப் போகிறது. குறிப்பாக செல்வ நிலையில் முன்னேற்றம் ஏற்படவுள்ளது. இப்போது ரிஷப ராசியில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் லக்ன வீட்டில் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் தேடி வரும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
கடகம்
கடக ராசியின் 11 ஆவது வீட்டில் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். சிலர் புதிய வருமான ஆதாரங்களைப் பெறுவார்கள். தொழில் ரீதியாக சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் இக்காலத்தில் கிடைக்கும். நிதி நிலை வலுவடையும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். குழந்தைகளால் சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
மேஷம்
மேஷ ராசியின் 2 ஆவது வீட்டில் சுக்ராத்திய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். திடீரென்று பணம் தேடி வரும். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஆர்டர்களைப் பெறுவார்கள். ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பேச்சால் பல முக்கியமான காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications