Latest Updates
-
குப்பையை பணம் கொடுத்து இறக்குமதி செய்யும் வினோத நாடு - எந்த நாடு? ஏன் இப்படி செய்கிறது தெரியுமா? -
ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
செப்டம்பரில் சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் யார் தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த பக்குவத்தில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
மஷ்ரூம் செட்டிநாடு மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - காரசாரமா சூப்பர் சைடிஷா இருக்கும் -
இதய நோய் வரக்கூடாதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 பழக்கங்களை வெச்சுக்கோங்க.. -
கடல் நீர் முழுவதும் குடிநீராக மாறினால் உலகில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
தக்காளி தோசையும், உடுப்பி வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 18 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம்
60 நாட்களுக்கு பின் உதயமாகும் சுக்கிரன்: ஜூன் 30 முதல் இந்த 3 ராசியின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது,,,..
Venus Rise In Gemini On 30 June 2024: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுவதைத் தவிர, அஸ்தமனமாகி உதயமாகவும் செய்யும். இப்படி கிரகங்களின் இயக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தெரியும்.
அந்த வகையில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் தற்போது அஸ்தமன நிலையில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஜூன் 30 ஆம் தேதி சுக்கிரன் மிதுன ராசியில் உதயமாகவுள்ளார். இப்படி சுக்கிரன் உதயமாவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து, வெற்றிகள் குவியும்.

வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். இப்போது மிதுன ராசியில் உதயமாகும் சுக்கிரனால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசியின் 9 ஆவது வீட்டில் சுக்கிரன் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். வெளிநாடு செல்ல வேண்டுமென்ற ஆசை இருந்தால், அது நிறைவேறும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்க நேரிடும். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள். மேற்படிப்புக்காக வெளிநாடு செல்லவும் வாய்ப்புள்ளது.
கன்னி
கன்னி ராசியின் 10 ஆவது வீட்டில் சுக்கிரன் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். உங்களின் சிந்திக்கும் திறன் மேம்படும். மேலும் நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல பலன்களைத் தரும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல நிதி நன்மைகளைப் பெறுவீர்கள். நிதி நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புக்களும் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 2 ஆவது வீட்டில் சுக்கிரன் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். அரசு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருந்தால், நல்ல செய்திகளைப் பெறும் வாய்ப்புள்ளது. பரம்பரை சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வியாபாரிகள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. பேச்சால் பல வேலைகளை சிறப்பாக முடிப்பீர்கள். திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications