கடகத்தில் உதயமாகியுள்ள சுக்கிரன்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் நிதி நிலை உயரப் போகுது...

Venus Rise In Cancer On August 2023: வேத ஜோதிடத்தில், அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் தான், அந்நபர் நல்ல செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழ முடியும்.

இதுவரை சுக்கிரன் கடக ராசியில் அஸ்தமன நிலையில் இருந்தார். அஸ்தமன நிலையில் கிரகங்கள் வலுவிழந்து இருக்கும். இந்நிலையில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி சுக்கிரன் கடக ராசியில் உதயமானார். இதனால் இதுவரை சுக்கிரனால் கிடைக்கவிருந்த நற்பலன்களில் உள்ள தடை நீங்கும்.

Venus Rise In Cancer On August 2023: These Zodiac Signs Will Get Financial Benefits In Tamil

இதன் விளைவாக சில ராசிக்காரர்களின் கைக்கு வராமல் இருந்த பணம், கைக்கு வரும், ஆடம்பரமான வாழ்க்கையை வாழ வாய்ப்புக்கள் உருவாகும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இப்போது சுக்கிரன் கடக ராசியில் உதயமாகியிருப்பதால் எந்த ராசிக்காரர்களின் நிதி நிலை உயரப் போகிறது என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசியின் 4 ஆவது வீட்டில் சுக்கிரன் உதயமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சந்தித்து வந்த பல பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நிலம், வீடு, வாகனம் போன்றவை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். குடும்ப சூழல் அமைதியாகவும், இனிமையாகவும் இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு சாதகமாக இருக்கும்.

கடகம்

கடக ராசியின் முதல் வீட்டில் சுக்கிரன் உதயமாகியுள்ளார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள். பலவிதமான நன்மைகளை இக்காலத்தில் பெறுவார்கள். இந்த ராசிக்காரர்களின் ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முக்கியமாக மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருப்பார்கள். நல்ல பண ஆதாயம் கிடைக்கும். சொத்துகளில் பணத்தை முதலீடு செய்தால், எதிர்காலத்தில் நல்ல பலனைப் பெறலாம். காதல் மற்றும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

மகரம்

மகர ராசியின் 7 ஆவது வீட்டில் சுக்கிரன் உதயமாகியுள்ளார். இதனால் இக்காலத்தில் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும் வாய்ப்புள்ளது. கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சமூகத்தில் நற்பெயர் அதிகரிக்கும். முக்கியமாக நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Saturday, August 19, 2023, 9:28 [IST]
Desktop Bottom Promotion