Latest Updates
-
இன்றைய ராசிபலன் 30 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஜூலையில் அஸ்தமனமாகும் குரு பகவான்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.. -
சுக்கிரன் சிம்ம ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
கனவில் பணத்தை பார்ப்பது அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா? அதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா? -
July Born Personality: ஜூலை மாதம் பிறந்தவங்களோட குணாதிசயம் உண்மையில் எப்படி இருக்கும் தெரியுமா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த கர்நாடகா ஸ்டைல் சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு நச்சுனு இருக்கும் -
சனிபகவானின் கோபத்தால் ஜூலை மாதத்தில் இந்த 3 ராசிக்காரங்க படாதபாடு படப்போறாங்களாம் - ஜாக்கிரதை -
2 கப் ராகி மாவும், 1/2 கப் ரவையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல 10 நிமிடத்தில் இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க.. -
இந்த இந்திய அரசர் நகரும் ஆடம்பர அரண்மனையை வைத்திருந்தாராம் - இப்போது அது எங்குள்ளது தெரியுமா? -
கருப்பான சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த உருளைக்கிழங்கு ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க...
சுக்கிரனால் ஆகஸ்ட் 18 முதல் இந்த 3 ராசிகளின் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது...
Venus Rise In Cancer On August 2023: வேத ஜோதிடத்தில், கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுவதைத் தவிர, சில சமயங்களில் அஸ்தமனம் மற்றும் உதயமாகவும் செய்யும். இப்படி கிரகங்களின் நிலைகளில் எந்த ஒரு மாற்றமும் அனைத்து ராசிகளிலுமே தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் தற்போது கடக ராசியில் அஸ்தமன நிலையில் உள்ளார். கிரகங்கள் அஸ்தமன நிலையில் இருக்கும் போது, அது வலுவிழந்து இருக்கும். இதனால் அந்த கிரகங்களால் கிடைக்கவிருக்கும் நல்ல பலன்களில் தாமதம் ஏற்படும்.

அதுவும் செல்வ செழிப்பின் காரணியான சுக்கிரன் அஸ்தமன நிலையில் இருந்ததால், இதுவரை சுக்கிரனின் அருளால் வரவிருந்த பண வரவில் தடை ஏற்பட்டிருக்கும். ஆனால் இந்த சுக்கிரன் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி கடக ராசியில் உதயமாகவுள்ளார். இதனால் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 2 ஆவது வீட்டில் சுக்கிரன் உதயமாகிறார். இதனால் ஆகஸ்ட் 18 முதல் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். நல்ல பண ஆதாயம் கிடைக்கும். இதுவரை அலுவலகத்தில் கடினமாக உழைத்தது வந்தால், அதற்கான நற்பலனைப் பெறக்கூடும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 8 ஆவது வீட்டில் சுக்கிரன் உதயமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் 18 முதல் பிரமாதமாக இருக்கப் போகிறது. நிறைய பணம் சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். அனைத்து வேலைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். சில நல்ல செய்திகளைப் பெறக்கூடும் புதிய தொழிலைத் தொடங்கினால், அதில் நல்ல லாபம் கிடைக்கும். நண்பர்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
துலாம்
துலாம் ராசியின் 10 ஆவது வீட்டில் சுக்கிரன் உதயமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத பண வரவைப் பெறுவார்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்களின் வேலை நீங்கள் திட்டமிட்டபடியே நடக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை இன்பமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications