Latest Updates
-
ஆடி மாத ராசி பலன் 2026: 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்? - ஜோதிடர் ஜெயலட்சுமி கணிப்புகள்! -
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி தண்ணி குழம்பு வையுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பச்சை மிளகாய் இருந்தா இந்த செட்டிநாடு மிளகாய் மண்டியை செய்யுங்க - காரமே இல்லாம சாப்பிட அருமையா இருக்கும் -
Sarcoma Awareness Month: சார்கோமா என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்த 4 நபர்கள் உங்கள் வாழ்க்கையில் இருந்தால் உங்க உயிருக்கு எப்ப வேணாலும் ஆபத்து வரலாம் - சாணக்கிய தந்திரம் -
ஜூலை இறுதியில் அடுத்தடுத்து நடக்கும் சனி, புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சுரைக்காய் தோசையும்.. முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
இன்றைய ராசிபலன் 16 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நஷ்டமும், சவால்களும் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சூரியன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், வெற்றிகளையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
1 கப் மீல் மேக்கர் இருந்தா இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - சாதம், சப்பாத்தி எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்
சிம்ம ராசியில் வக்ரமாகும் சுக்கிரன்: ஜூலை 23 முதல் இந்த 3 ராசிகளின் நிதி நிலை உயரப் போகுது...
Venus Retrograde In Leo On July 2023: வேத ஜோதிடத்தில் சுக்கிரன் அழகு, காதல், ஆடம்பரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இந்த சுக்கிரன் 2023 ஜூலை 07 ஆம் தேதி சூரியன் ஆளும் சிம்ம ராசிக்குள் நுழைந்தார். சிம்ம ராசியில் நுழைந்த சில நாட்களிலேயே, சுக்கிரன் வக்ரமாகி பின்னோக்கி நகரவுள்ளார்.
அதாவது ஜூலை 23 ஆம் தேதி சுக்கிரன் சிம்ம ராசியில் வக்ரமாகவுள்ளார். சிம்மத்தில் வக்ரமாகும் சுக்கிரன் 2023 ஆகஸ்ட் 07 ஆம் தேதி கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதன் பின் செப்டம்பர் 04 ஆம் தேதி மீண்டும் சிம்ம ராசிக்கு செல்கிறார்.

இப்படி சுக்கிரன் ஜூலை 23 ஆம் தேதி சிம்ம ராசியில் வக்ரமாவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், அதில் சில ராசிக்காரர்கள் நல்ல பண ஆதாயத்தைப் பெற்றாலும், சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டியிருக்கும். இப்போது சிம்ம ராசியில் வக்ரமாகும் சுக்கிரனால் எந்த ராசிக்காரர்கள் நல்ல நிதி பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 3 ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ரமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கப் போகிறது. வெளிநாட்டில் இருப்பவர்கள் நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கலாம்.
வியாபாரிகள் நல்ல லாபத்தைக் காண்பார்கள். தொழில் ரீதியாக, இக்காலத்தில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். அதை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இக்கால கட்டத்தில் சமூகத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் முதல் வீட்டில் சுக்கிரன் வக்ரமாகிறார். இதனால் சிம்ம ராசிக்காரர்களுக்கு இக்காலமானது சிறப்பாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்புக்களும் கிடைக்கலாம்.
பணிபுரிபவர்களுக்கு கடின உழைப்பிற்கான முழு பலனும் கிடைக்கும். இக்காலத்தில் எவ்வளவு கடினமான சூழ்நிலைகளையும் எளிதில் சமாளிப்பீர்கள். நிதி ரீதியாக, இக்காலத்தில் நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 11 ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். அபரிமிதமான செல்வம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பரம்பரை சொத்துக்கள் கிடைப்பதோடு, திடீரென்று உங்களைத் தேடி பணம் வரும்.
வேலை கிடைக்காமல் நீண்ட நாட்களால் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு, இக்காலத்தில் நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் இலக்கை நிர்ணயித்து, பின் வேலை செய்தால் வெற்றி கிடைக்கும். திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications