Latest Updates
-
இன்றைய ராசிபலன் 15 ஜூலை 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் அஸ்தமனமாகும் குரு பகவான்: இன்று முதல் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வீட்டுல காய்கறி எதுவும் இல்லையா? மீல் மேக்கர் வெச்சு இந்த வெள்ளை சால்னா செய்யுங்க.. அள்ளும்.. -
வெயிலால் கருப்பாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப தக்காளியை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது... -
பீட்ரூட்டை இந்த ஸ்டைலில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
உங்ககிட்ட இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப உங்களுக்கு இன்சுலின் எதிர்ப்பு இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார்.. -
Aani Amavasya 2026: ஆனி அமாவாசையான இன்று இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த கஞ்சியை வாரம் 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடையும் குறையும், சுகருக்கும் நல்லது.. -
இன்றைய ராசிபலன் 14 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப பதட்டமான நாளாக இருக்கப்போகுதாம்
சிம்ம ராசியில் வக்ரமாகும் சுக்கிரன்: ஜூலை 23 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படப்போகுது..
Venus Retrograde In Leo In July 2023: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட இடைவெளியில் ராசியை மாற்றும். சில சமயங்களில் நேர்பாதையில் பயணிக்கும் கிரகங்கள், பின்னோக்கி வக்ர நிலையில் பயணிக்கும். இப்படி வக்ர நிலையில் கிரகங்கள் பயணிக்கும் போது, அந்த கிரகங்கள் வலுவிழந்து இருக்கும். இதனால் இந்த கிரகங்களால் பெறவுள்ள பலன்கள் தாமதமாகும்.
அந்த வகையில் நவகிரகங்களின் அழகு, காதல், ஆடம்பரம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் தற்போது சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சுக்கிரன் சிம்ம ராசியில் ஜூலை 23 ஆம் தேதி வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார்.

சுக்கிரன் வக்ரமாவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். ஆனால் 3 ராசிக்காரர்கள் சுக்கினால் நல்ல பலன்களைப் பெறவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 4 ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். நடத்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சமூகத்தில் நல்ல நிலையில் உள்ளவர்களுடன் நட்பு கிடைக்கும். நிதி நிலையை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். இக்காலத்தில் திட்டமிட்டு செயல்பட்டால் நல்ல வெற்றி கிடைக்கும்.
மகரம்
மகர ராசியின் 8 ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ரமாகவுள்ளார். இதனால் மகர ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கப் போகிறது. காதலிப்பவர்களுக்கு இக்காலம் மிகவும் இனிமையாக இருக்கும். வியாபாரிகள் புதிய திட்டத்தால் நல்ல லாபத்தைக் காண்பார்கள்.
பணிபுரிபவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். மேலும் வருமானத்தில் உயர்வு ஏற்படவும் வாய்ப்புள்ளது. வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் இக்காலத்தில் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். மொத்தத்தில் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் நல்ல வளர்ச்சியை காணக்கூடும்.
கடகம்
கடக ராசியின் 2 ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ரமாகிறார். இதனால் இக்காலம் கடக ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கப் போகிறது. திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாக இருக்கும்.
வாழ்வில் பல நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகள் புதிய திட்டங்களை தீட்டி நல்ல லாபத்தை பெறுவார்கள். கூட்டு வியாபாரிகளுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். முக்கியமாக திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications