Latest Updates
-
ஆகஸ்ட் கடைசியில் நடக்கும் சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களின் வேலையில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும்! -
செப்டம்பரில் இரண்டு முறை ராசி மாறும் புதன்: சகல சௌபாக்கியத்தை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
1 கப் ரவையும், 1 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. அள்ளும்.. -
கழிப்பறையில் ஐஸ் கட்டிகளை கொட்டுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தமாம்.. எச்சரிக்கும் எய்ம்ஸ் டாக்டர்! -
இட்லி அரிசியும், அப்பளமும் இருந்தா இந்த கேரளா ஸ்டைல் அப்பள வடையை செய்யுங்க - வேற லெவலில் இருக்கும் -
சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 5 ராசிகளின் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது! -
10 கிராம் 1 கோடிக்கு விற்கப்படும் உலகின் விலையுயர்ந்த மரம் எது தெரியுமா? இதுல அப்படி என்னதான் இருக்கு? -
இட்லி, தோசைக்கு இப்படி வெங்காய சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறாக இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் துரத்தப்போகுதாம்
18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் ராகு சுக்கிர சேர்க்கை: மார்ச் 31 முதல் இந்த 3 ராசியின் நிதி நிலை உயரப்போகுது!
Venus Rahu Conjunction 2024 In Pisces After 18 Years: நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் செல்வம், அழகு, ஆடம்பரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். சுக்கிரனின் நிலையில் மாற்றங்கள் ஏற்படும் போது ஒருவரது நிதி நிலையில் மாற்றங்கள் ஏற்படும். இந்த சுக்கிரன் ஹோலி பண்டிகைக்கு பின் ராசியை மாற்றவுள்ளார்.
அதுவும் குரு பகவானின் ராசியான மீன ராசிக்குள் மார்ச் 31 ஆம் தேதி நுழையவுள்ளார். ஏற்கனவே இந்த மீன ராசியில் ராகு பயணித்து வருகிறார். இதனால் இந்த சுக்கிர பெயர்ச்சிக்கு பின் மீன ராசியில் ராகு சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இந்த சேர்க்கையானது சுமார் 18 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ளது.

இந்த சேர்க்கையால் சில ராசிக்காரர்களின் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடைய போகிறது. அதோடு நிதி நிலையில் நல்ல உயர்வும் ஏற்படப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டில் ராகு சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். மேலும் நிதி நிலையிலும் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் பயணத்தை மேற்கொள்ள நேரிடும். வேலையை மாற்ற நினைத்தால், இக்காலத்தில் நல்ல மேற்கொண்டால் நல்ல பலனைப் பெறலாம். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 5 ஆவது வீட்டில் ராகு சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் நல்ல நேரத்தை செலவிடுவார்கள். வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். வெளிநாட்டில் படிக்க நினைத்தால் அதற்கான வாய்ப்பு கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள்.
கன்னி
கன்னி ராசியின் 7 ஆவது வீட்டில் ராகு சுகிர சேர்க்கை நிகழவுள்ளது. வணிகர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். இக்காலத்தில் மனதளவில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications