Latest Updates
-
இன்றைய ராசிபலன் 20 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணம் கொட்டும் நாளாக இருக்குமாம் -
புதன் சிம்ம ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு மூடப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
செப்டம்பரில் சனி-செவ்வாயால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 4 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
ஆந்திரா முட்டைக்கோஸ் பச்சடி ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
தங்க நகைகள் ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி கொடுக்கப்படுகிறது தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
முகம் எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் வாஷ் யூஸ் பண்ணுங்க.. -
அரிசி மாவும், தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
அமெரிக்க டாலரில் $ சின்னம் ஏன் உள்ளது தெரியுமா? அதன் அர்த்தமும், வரலாறும் என்ன தெரியுமா? -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
Varalakshmi Vratam 2026: வரலட்சுமி விரதத்தின் போது டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
Venus Nakshatra Transit On April 2024: வேத ஜோதிடத்தில், சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார் மற்றும் இவர் அசுரர்களின் குருவும் கூட. இந்த சுக்கிரனின் நிலையில் மாற்றங்கள் ஏற்படும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். எப்படி சுக்கிரன் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுகிறாரோ, அதேப் போல் நட்சத்திரங்களையும் மாற்றுவார்.
அந்த வகையில் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி ஏப்ரல் மாத இறுதியில் நிகழவுள்ளது. தற்போது சுக்கிரன் ரேவதி நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஏப்ரல் 25 ஆம் தேதி அஸ்வினி நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். இந்த நட்சத்திரத்தில் மே 05 ஆம் தேதி வரை இருப்பார். 10 நாட்கள் இந்த நட்சத்திரத்தில் சுக்கிரன் இருப்பதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளார்கள்.

ஜோதிடத்தில் அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதி கேது. இந்த கேதுவும், சுக்கிரனும் நட்புறவு கொண்டுள்ளதால், இந்த சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களின் தலைமைத்திறனை அதிகரிப்பதோடு, வெளியூர் பயணத்தை அதிகம் மேற்கொள்ள வைக்கும். அதோடு தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபமும் கிடைக்கும். இப்போது சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியின் போது சுக்கிரன் மேஷ ராசியின் முதல் வீட்டில் இருப்பார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணியிடத்தில் உங்களின் வேலை நல்ல பாராட்டைப் பெறும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆளுமையில் நல்ல முன்னேற்றம் தெரியும். மேலும் நிதி ரீதியாக நல்ல பலன்கள் கிடைக்கும். நிறைய பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்த நோயில் இருந்து விடுபடுவீர்கள். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமண வாழ்வில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
மிதுனம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்கள் பணியிடத்தில் சிறப்பான செயல்திறனால் நல்ல பாராட்டுக்களைப் பெறுவீர்கள். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கலாம். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைப்பதோடு, பணத்தை சேமிக்கவும் முடிவும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். காதல் வாழ்க்கையைப் பொறுத்தவரை இனிமையாக இருக்கும். உறவுகள் மேம்படும்.
கன்னி
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்கள் சிறப்பான பலனைப் பெறுவார்கள். பணிபுரிவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்கள் நிறைய நன்மைகளைப் பெறுவார்கள். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்களும் கிடைக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications