Latest Updates
-
புதன் கன்னி ராசியில் உதயமாவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பூரி பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ரோட்டுக்கடை முட்டை சேர்வா ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா? -
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா?
சுக்கிரன்-சந்திரன் சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்கு அற்புதமா இருக்கப் போகுது..!
Venus Moon Conjunction In Cancer 2023: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் ஒரே ராசியில் ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்களின் சேர்க்கைகள் நிகழும்.
அப்படி கிரக சேர்க்கைகள் நிகழும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் 2023 மே 30 ஆம் தேதி சுக்கிரன் கடக ராசிக்குள் நுழைந்தார். கடக ராசியானது சந்திரன் ஆளும் ராசி.

இந்நிலையில் சந்திரன் ஜூன் 20 ஆம் தேதி மாலை கடக ராசிக்குள் நுழைகிறார். இதனால் கடக ராசியில் சுக்கிரன் மற்றும் சந்திரனின் சேர்க்கை நிகழ்கிறது. இந்த சேர்க்கையானது அடுத்த 2 நாட்கள் நீடித்திருக்கும்.
சொந்த ராசியில் சுக்கிரனுடன் சந்திரன் சேர்ந்திருப்பதால், 3 ராசிக்காரர்களுக்கு அடுத்த இரண்டு நாட்கள் மிகவும் அற்புதமாக இருக்கப் போகிறது. இப்போது சுக்கிரன் சந்திரன் சேர்க்கையால் எந்த ராசிக்காரர்கள் அதிக நற்பலனைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரன்-சந்திரன் சேர்க்கையானது 4 ஆவது வீட்டில் நிகழ்கிறது. இதனால் இக்காலத்தில் வாகனம் மற்றும் சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. பரம்பரை சொத்துக்களையும் பெற வாய்ப்புள்ளது. மேலும் வேலை இல்லாதவர்களுக்கு இக்காலத்தில் புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்பத்திற்காக சில முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். அந்த முடிவுகளால் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சுக்கிரன்-சந்திரன் சேர்க்கையானது 9 ஆவது வீட்டில் நிகழ்கிறது. இதனால் இக்காலம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். இக்காலத்தில் அதிர்ஷ்டம் ஆதரவாக இருக்கும். தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். பெற்றோரிடம் இருந்து சில முக்கியமான ஆலோசனைகளைப் பெறுவீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் கிடைக்கலாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளது. தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும். பழைய முதலீடுகளால் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 2 ஆவது வீட்டில் சுக்கிரன்-சந்திரன் சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இக்காலத்தில் நிதி ரீதியான நன்மைகளைப் பெறுவீர்கள். எதிர்பாராத வகையில் திடீர் பணத்தைப் பெறக்கூடும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் உங்களின் நிலை அலுவலகத்தில் உயரும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உங்களின் புகழ் இக்காலத்தில் அதிகரிக்கும். இக்காலத்தில் உங்கள் பேச்சு மற்றவர்களை கவரும் வகையில் இருக்கும். இதனால் பல நல்ல காரியங்கள் நடக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications