Latest Updates
-
செப்டம்பரில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களை செல்வந்தராக்கப் போகுது.! உங்க ராசி என்ன? -
பாபா வங்காவின் கணிப்பு படி செப்டம்பர் மாதத்தில் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பச்சை சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஒருடைம் இந்த க்ரீமி பாலக் பன்னீர் கிரேவி செய்யுங்க.. டேஸ்ட் அல்ட்டிமேட்டா இருக்கும்... -
பிளாஸ்டிக் நாற்காலிகளின் நடுவில் ஏன் ஒரு துளை உள்ளது தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், 1 கப் மைதா மாவும் இருந்தா.. ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
பூர நட்சத்திரத்திற்குள் நுழையும் சூரியனால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ரக்ஷா பந்தன் நாளில் உருவாகும் நவபஞ்ச யோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
Dengue: அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. எச்சரிக்கும் டாக்டர்! -
கொங்கணி ஸ்டைல் காராமணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும்
சுக்கிரன் உருவாக்கும் மாளவ்ய ராஜயோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் நிதி நிலை உயரப்போகுது...
Venus Make Malavya Raj Yoga: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒருவரது நிதி நிலை சிறப்பாக இருக்க வேண்டுமானால், ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.
ஏனெனில் நவகிரகங்களில் சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். மாதம் ஒரு முறை ராசியை மாற்றக்கூடிய சுக்கிரன், ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். அந்த வகையில் சுக்கிரன் 2023 நவம்பர் 30 ஆம் தேதி தனது சொந்த ராசியான துலாம் ராசிக்குள் நுழைகிறார்.

சுக்கிரன் தனது மூலதிரிகோண ராசியான துலாம் ராசியில் நுழைவதால் , மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த மாளவ்ய ராஜயோகமானது பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்றாகும்.
இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் சுக்கிரனின் அருளால் நிதி நிலையில் அபரிமிதமான நன்மைகளைப் பெறவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
மகர ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்வதோடு, இந்த வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாவதால், இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். மேலும் நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
முன்பை விட இந்த பெயர்ச்சிக்கு பின் நிறைய பணத்தை சேமிக்க முடியும். மீடியா, ஃபேஷன், டிசைனிங், மாடலிங் மற்றும் கலை துறையில் பணிபுரிபவர்களுக்கு இந்த சுக்கிர பெயர்ச்சியானது நல்ல பலன்களை வாரி வழங்கும். வணிகர்கள் கூட நிறைய லாபத்தைப் பெற முடியும்.
மேஷம்
மேஷ ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்வதோடு, இந்த வீட்டில் மாளவ்ய ராயோகத்தை உருவாக்குகிறார். இதனால் திருமணமாகாதவர்கள் நல்ல வரனை இக்காலத்தில் பெறுவார்கள். திருமணமானவர்களுக்கு வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும்.
முக்கியமாக எதிர்பாராத பண வரவைப் பெறக்கூடும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையை வெற்றிகரமாக செய்து முடிப்பார்கள். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கலாம். மொத்தத்தில் வாழ்க்கை இனிமையாகவும் செழிப்பாகவும் இருக்கும்.
துலாம்
துலாம் ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்வதோடு, மாளவ்ய ராஜயோகத்தையும் உருவாக்குகிறார். சொந்த ராசியில் சுக்கிரன் நுழைவதால், இந்த ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். ஆளுமையில் முன்னேற்றம் ஏற்படும்.
திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். காதலிப்பவர்களுக்கு இக்காலம் ரொமான்டிக்காக இருக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வாழ்க்கை துணை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications