Latest Updates
-
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் குருபகவான்: அக்டோபர் முதல் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் தீர போகுது! -
இன்றைய ராசிபலன் 29 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
பூரிக்கு ஒருவாட்டி இந்த பக்குவத்துல உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
செப்டம்பர் 01-ல் சனி-குருவால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: தொழிலில் அபார வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிகள்! -
சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் அக்டோபர் வரை ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
சுரைக்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
கர்நாடகா சுரைக்காய் சட்னி ரெசிபி - இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
செப்டம்பரில் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
Krishna Janmashtami 2026: கிருஷ்ண ஜெயந்தி எப்போது வருகிறது? வீட்டில் எப்படி பூஜை செய்யணும் தெரியுமா? -
ராகி மாவும், பச்சை பயறும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி கொழுக்கட்டை செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க
1 வருடத்திற்கு பின் கன்னியில் சுக்கிரனால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு 'லக்' அடிக்கப்போகுது..
Venus Made Neech Bhang Rajyoga: ஜோதிடத்தில் அழகு, ஆடம்பரம், செழிப்பு, காதல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ஆகிய ராசிகளின் அதிபதியாவார். மாதம் ஒருமுறை ராசியை மாற்றக்கூடிய சுக்கிரன், தற்போது சூரியனின் சிம்ம ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் சுக்கிரன் கன்னி ராசிக்குள் நுழையவுள்ளார். கன்னி ராசியில் சுக்கிரன் பலவீனமாக இருப்பார். இந்த ராசியில் சுக்கிரன் நுழைந்ததும் நீச்ச பங்க ராஜயோகம் உருவாகவுள்ளது.

இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் திடீர் பணத்தையும், அதிர்ஷ்டத்தையும் பெறவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
மகர ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்வதோடு, நீச்சபங்க ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். இதனால் இந்த காலத்தில் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக நிறைவேறும். வியாபாரத்தில் உள்ள தடைகள் நீங்கும்.
வேலை மற்றும் வியாபாரம் தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். வெளிநாடு தொடர்பான வணிகம் செய்பவர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்வதோடு, இந்த வீட்டில் நீச்சபங்க ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத அளவில் பணத்தைப் பெறக்கூடும். நிதி நிலை வழக்கத்தை விட வலுவாக இருக்கும். அதிரஷ்டத்தின் ஆதரவால் பணக்குறைவு எதுவும் இருக்காது.
ஆளுமையில் முன்னேற்றம் ஏற்படும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். முக்கியமாக இக்காலத்தில் உங்கள் பேச்சு சிறப்பாக மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்வதோடு, நீச்சபங்க ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் பிரகாசிப்பார்கள். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. முக்கியமான வேலைகளில் வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். முக்கியமாக தந்தையின் முழு ஆதரவை இக்காலகட்டத்தில் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications