Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
மீன ராசியில் உருவாகியுள்ள மாளவ்ய ராஜயோகம்: ஏப்ரல் 13 வரை இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகமா இருக்கும்..
Venus Made Malavya Rajyog In Pisces: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின ராசி மாற்றங்களுடன், கிரகங்களின் சேர்க்கையால் பல்வேறு யோகங்கள் உருவாகும். அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார்.
இந்த சுக்கிரன் மார்ச் 31 ஆம் தேதி குரு பகவானின் ராசியான மீன ராசிக்குள் நுழைந்தார். இந்த மீன ராசியில் ஏற்கனவே சூரியன் பயணித்து வருகிறார். இதனால் சுக்கிரன் மற்றும் சூரியனின் சேர்க்கை மீன ராசியில் நிகழவுள்ளது. இந்த சேர்க்கையானது மாளவ்ய ராஜயோகம் உருவாகியுள்ளது.

இந்த மாளவ்ய ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் பல வெற்றிகளையும், பண வரவையும் பெறவுள்ளார்கள். இப்போது மீன ராசியில் உருவாகியுள்ள மாளவ்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு மாளவ்ய ராஜயோகமானது 10 ஆவது வீட்டில் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். நிறைய பணத்தை சேமிப்பார்கள். வங்கி இருப்பு அதிகரிக்கும். பொருள் வசதிகள் பெருகும். ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்கள். வேலை மாற்றம், பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கன்னி
கன்னி ராசியின் 7 ஆவது வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவைப் பெறுவார்கள். திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். இதுவரை பண பிரச்சனையை சந்தித்து வந்தால், இந்த யோக காலத்தில் பண வரவு அதிகரித்து, நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். பொருள் வசதிகள் அதிகரிக்கும். ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்கள். நம்பிக்கை அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் மற்றும் வியாபாரிகள் வேலையில் நல்ல வெற்றியையும், நிதி நன்மைகளையும் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications