Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
18 ஆண்டுகளுக்கு பின் கன்னியில் நிகழும் சுக்கிரன் கேது சேர்க்கை: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
Venus Ketu Conjunction In Virgo 2023: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும். அப்படி மாற்றும் போது சில சமயங்களில் மற்ற கிரகங்களுடன் இணைந்து பயணிக்கும். அப்படி கிரகங்கள் இணைந்து பயணிக்கும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் நிழல் கிரகமான கேது அக்டோபர் 30 ஆம் தேதி கன்னி ராசியில் நுழைந்தார். அதைத் தொடர்ந்து அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் சுக்கிரன் நவம்பர் 03 ஆம் தேதி கன்னி ராசியில் நுழைந்துள்ளார். இதனால் கன்னி ராசியில் கேது, சுக்கிரன் சேர்க்கை உருவாகியுள்ளது.

இந்த சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த சேர்க்கையால் திடீர் பணவரவையும், முன்னேற்றத்தையும் பெறவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசியின் முதல் வீட்டில் சுக்கிரன் கேது சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். இந்த ராசிக்காரர்களின் எண்ணங்கள் இக்காலத்தில் மிகவும் தெளிவாக இருக்கும். நன்கு திட்டமிட்டு எந்த வேலைகளையும் செய்வீர்கள். இதனால் நல்ல பலன்களும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 10 ஆவது வீட்டில் கேது சுக்கிர சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் பணியிடத்தில் இந்த ராசிக்காரர்களின் நிலை வலுவடையும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். தந்தையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஆர்டர்கள் கிடைக்கும். மொத்தத்தில் பண வரவு சிறப்பாக இருக்கும்.
மகரம்
மகர ராசியின் 9 ஆவது வீட்டில் கேது சுக்கிர சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். உங்கள் எதிரிகளை நீங்கள் இக்காலத்தில் தோற்கடிப்பீர்கள். உங்களின் ஒவ்வொரு செயலும் வெற்றிகரமாக முடிவடையும். தந்தையின் உதவியால் புதிய சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புள்ளது. வேலை தொடர்பான பயணங்கள் நல்ல பலனைத் தரும். மாணவர்கள் இக்காலத்தில் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications