Latest Updates
-
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இப்படி சட்னி அரைங்க.. வீட்டுல எல்லாரும் எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
புதன் வக்ர பெயர்ச்சியால் ஜூன் இறுதியில் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
சுக்கிரன்-கேதுவின் இணைப்பால் ஜூலை மாதம் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
அடர்த்தியான தலைமுடியை பெற உதவும் செம்பருத்தி எண்ணெய் - எப்படி தயாரிக்கணும் தெரியுமா? -
இறந்தவர்கள் கனவில் வருவது அதிர்ஷ்டமா? எச்சரிக்கையா? கனவு சாஸ்திரம் கூறும் உண்மை என்ன? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அடுத்த ஜென்மம் என்னவா பிறப்பீங்க-ன்னு சொல்றோம்.. -
4 தக்காளி இருந்தா கோயம்புத்தூர் ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு வேற லெவலில் இருக்கும் -
1 கப் உளுந்தும், 1/2 கப் பாசிப்பருப்பும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசிகளில் பிறந்தவர்களுக்கு திடீர் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா?
18 ஆண்டுகளுக்கு பின் கன்னியில் நிகழ்ந்துள்ள கேது சுக்கிரன் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு திடீர் பண வரவு கிடைக்கும்
Venus Ketu Conjunction In Virgo 2023: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் இயக்கங்களும், அதனால் உருவாகும் யோகங்களும் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நவகிரகங்களில் அழகு, காதல், ஆடம்பம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் மாதம் ஒரு முறை ராசியை மாற்றுவார். இவர் நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் கன்னி ராசிக்குள் நுழைந்தார்.
அதேப் போல் நிழல் கிரகமாக கருதப்படுபவர் கேது. இந்த கேது 18 மாதங்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். இவர் அக்டோபர் மாதத்தின் கடையில் தான் கன்னி ராசிக்குள் நுழைந்தார். இதனால் கன்னி ராசியில் சுக்கிரன் கேது சேர்க்கை நிகழ்ந்துள்ளது.

18 ஆண்டுகளுக்கு பின் இந்த சேர்க்கை நிகழ்ந்துள்ளதால், இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த சேர்க்கையால் திடீர் பண வரவையும், முன்னேற்றத்தையும் காண்பார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 6 ஆவது வீட்டில் சுக்கிரன் கேது சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் நல்ல ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்கள். பணம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இதனால் நிதி நிலை நன்கு வலுவடையும். பங்குச் சந்தை, லாட்டரியில் நன்மைகளைப் பெறக்கூடும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், இக்கால கட்டத்தில் அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
சிம்மம்
சிம்ம ராசியின் 2 ஆவது வீட்டில் கேது சுக்கிரன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத பண வரவைப் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு தொழில் நல்ல வளர்ச்சி ஏற்படும் மற்றும நிதி நிலையில் நல்ல முன்னேற்றமும் ஏற்படும். அதோடு சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
சிலர் க்காலத்தில் தொழிலை விரிவுபடுத்த கடனை வாங்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பேச்சால் பலரை கவர்வீர்கள் மற்றும் உங்களின் பல வேலைகளும் வெற்றிகரமாக முடிவடையும்.
கன்னி
கன்னி ராசியின் முதல் வீட்டில் சுக்கிரன் கேது சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இந்த சேர்க்கை காலமானது சாதகமாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். நம்பிக்கை அதிகரிக்கும்.
அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வேலையில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். மனநிலை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். சிலர் புதிய வருமான ஆதாரங்களை உருவாக்க முடியும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications