Latest Updates
-
செப்டம்பர் 01-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: இந்த 3 ராசிகளுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுக்கப்போகிறது -
மெட்ராஸ் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
என்னது ஒரு பசுவின் விலை 35 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பசு மாட்டில்? ஷாக் ஆகாதீங்க -
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்! -
மூட்டு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த உளுந்து கஞ்சியை தினமும் காபி, டீ-க்கு பதிலா குடிங்க.. -
செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போறாங்க.. -
உங்ககிட்ட இந்த 5 காலை பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. அது உடம்பில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும்! -
டக்குன்னு சமையலை முடிக்கணுமா? அப்ப தயிர் இருந்தா, 10 நிமிஷத்துல இப்படி குழம்பு செய்யுங்க..
வக்ர நிவர்த்தி அடையும் சுக்கிரன்: செப்டம்பரில் இந்த 3 ராசிகளின் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்!
Venus Direct In Cancer 2023: நவகிரகங்களில் செல்வம், அழகு, காதல், செழிப்பு, மகிழ்ச்சி ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் சுப கிரகம் தான் சுக்கிரன். இந்த சுக்கிரன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் தான், வாழ்வில் இந்த அம்சங்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதுவே மோசமான நிலையில் இருந்தால், அவர் வறுமையால் வாடுவதோடு, பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
அந்த வகையில் சுக்கிரன் ஆகஸ்ட் 08 ஆம் தேதி கடக ராசிக்குள் வக்ர நிலையில் நுழைந்து பயணித்து வந்தார். இந்நிலையில் செப்டம்பர் 04 ஆம் தேதி சுக்கிரன் வக்கிர நிவர்த்தி அடைந்து கடக ராசியில் நேர்பாதையில் பயணிக்கத் தொடங்குகிறார். சுப கிரகங்கள் வக்ரம் அடைந்தால், கெடுபலன்கள் குறைவாகவே இருக்கும். இருப்பினும் சில ராசிக்காரர்கள் பிரச்சனைகளை சந்திப்பார்கள்.

அதுவும் சுக்கிரன் வக்ரம் அடைந்ததால், சில ராசிக்காரர்கள் தங்கள் வாழ்வில் பல பிரச்சனைகளை சந்தித்திருக்கலாம். ஆனால் வக்ர நிவர்த்தி அடையும் போது, அந்த பிரச்சனைகள் மாயமாய் மறைந்து, வாழ்க்கை செழிப்பாக இருக்கும். இப்போது கடக ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் சுக்கிரனால் எந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த சுக்கிரன் 10 ஆவது வீட்டில் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். புதிய வேலையைத் தொடங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஆர்டர்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு நல்ல சம்பளத்துடனான புதிய வேலை வாய்ப்புக்கள் தேடி வரும். முக்கியமாக விரும்பிய இடமாற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது.
மிதுனம்
மிதுன ராசியின் 2 ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இக்காலத்தில் திடீர் பண ஆதாயம் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தலைமை பண்புகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பேச்சால் பல காரியங்களை சாதிப்பீர்கள். வியாபாரிகள் இக்காலத்தில் கடன் வாங்கி சரக்குகளை வாங்கி வைக்கலாம். இதனால் வியாபாரம் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 9 ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் ஜொலிக்கும். தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். சிறு பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இந்த பயணங்களால் நல்ல பண ஆதாகம் கிடைக்கும். மாணவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வரும். முக்கியமாக இக்காலத்தில் நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications