Latest Updates
-
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பாயாசம் செஞ்சு பாருங்க... அமிர்தம் மாதிரி இருக்கும்...! -
முட்டையை இந்த மாதிரி பொரியல் செஞ்சு பாருங்க... டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்... ஆரோக்கியமாவும் இருக்கும்...! -
மூன்றாம் உலகப்போர் வந்தாலும் இந்த நாடுகளில் மக்கள் பாதுகாப்பாக இருப்பார்களாம்... எந்தெந்த நாடுகள் தெரியுமா? -
100 ஆண்டுக்கு பின் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறதாம்...! -
கலகத்தை உருவாக்குவதற்காகவே பிறந்த 4 ராசிக்காரங்க இவங்கதான்...ரொம்ப ஆபத்தானவங்க இவங்க...உங்க ராசி இதுல இருக்கா? -
3 கத்திரிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செம சூப்பரா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்...! -
யமனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையே அடியோடு மாறப்போகுது.. -
முகத்தில் உள்ள ஹோலி நிறங்களை நீக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1 வாழைப்பழமும் இருந்தா.. இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. 2 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்..
உங்க ராசியை சொல்லுங்க.. உங்களுக்கு எந்த திசை பார்த்த வீடு அதிர்ஷ்டத்தை தரும்-ன்னு சொல்றோம்...
Vastu Tips In Tamil: எப்படி ஒருவர் குடியிருக்கும் வீடு வாஸ்துப்படி இருக்க வேண்டியது முக்கியமோ, அதேப் போல் அந்த வீட்டின் நுழைவாயில் மிகவும் முக்கியமானது. ஏனெனில் வீட்டின் நுழைவாயின் வழியாகத் தான், அந்த வீட்டிற்குள் நேர்மறை ஆற்றல் நுழைந்து, அந்த வீட்டில் செல்வம், ஆரோக்கியம், மகிழ்ச்சி ஆகியவற்றை வழங்குகிறது. எனவே ஒரு வீட்டின் நுழைவாயில் மிகவும் சுத்தமாகவும், அழகாகவும் இருக்க வேண்டியது மிகவும் முக்கியம்.
அதுவும் ஒருவர் குடியிருக்கும் வீட்டின் நுழைவாயில் திசையானது, அந்த வீட்டில் உள்ளோரின் ராசிக்கேற்ப இருந்தால், அது இன்னும் பல நன்மைகளை வழங்கும். முக்கியமாக வாழ்வில் நல்ல முன்னேற்றத்தையும், செழிப்பையும், மகிழ்ச்சியையும் தரும். இப்போது எந்த ராசிக்காரர்கள் எந்த திசை பார்த்த வீட்டில் இருப்பது நன்மை பயக்கும் என்பதைக் காண்போம். உங்கள் ராசிக்கு எந்த திசை வீடு சரியாக இருக்கும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
வாஸ்துப்படி, மேஷ ராசிக்காரர்கள் கிழக்கு திசை பார்த்த வீட்டில் இருப்பது நல்லது. மேஷ ராசிக்கு சூரியன் ஒரு சாதகமான கிரகம். எனவே கிழக்கு திசையை நோக்கிய வீட்டில் மேஷ ராசிக்காரர்கள் இருந்தால், அவர்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். அதுவும் வீட்டின் பிரதான வாசலில் ஸ்வஸ்திகா சின்னத்தை வைப்பது இன்னமும் நல்லது.
ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு வட கிழக்கு பார்த்த வீடு நல்ல அதிர்ஷ்டமானதாக இருக்கும். வடகிழக்கு திசையானது எப்போதும் நேர்மறை ஆற்றல், செல்வம், ஆரோக்கியம், சக்தி மற்றும் செழிப்புடன் மகிழ்ச்சியைத் தரும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு வடகிழக்கு பார்த்த வீடு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும். இந்த திசையானது நேர்மறை ஆற்றலை வீட்டிற்கு கொண்டு வருவதோடு, அதிர்ஷ்டத்தையும் வழங்கும். மேலும் வாஸ்துப்படி, இவர்கள் இன்னும் சிறப்பான பலனைப் பெற மஞ்சள் நிற பெயிண்ட்டை வீட்டிற்கு பயன்படுத்த வேண்டும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான திசை என்றால், அது வடக்கு. இந்த திசை செல்வத்தின் அதிபதியான குபேரனுடன் தொடர்புடையது. இவர்கள் வீட்டின் வடக்கு நோக்கிய சுவற்றில் வெளிரிய பச்சை நிற பெயிண்ட் பயன்படுத்த வேண்டும். மேலும் இவர்கள் வீட்டின் பிரதான நுழைவாயிலில் ஸ்வஸ்திகா சின்னத்துடன், பச்சை நிற விநாயகரின் சிலையை வைப்பதும் நல்ல பலனை வழங்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு வட மேற்கு திசை மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். வாஸ்துப்படி, இந்த ராசிக்காரர்கள் வடமேற்கு சுவற்றில் சந்திரனின் படத்தை தொங்க விட வேண்டும். மேலும் இவர்கள் வெள்ளியால் ஆன ஸ்வஸ்திகா சின்னத்தை வீட்டின் பிரதான கதவில் தொங்க விடுவது நல்லது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான திசை என்றால், அது வடமேற்கு திசையாகும். வாஸ்துப்படி, இவர்கள் வீட்டிற்கு க்ரீம் நிற பெயிண்ட்டை அடித்தால், அது அவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு மேற்கு திசையை பார்த்த வீடு நல்ல அதிர்ஷ்டத்தை வழங்கும். இந்த திசையை நோக்கிய வீட்டில் இருந்தால், அது நேர்மறையான ஆற்றலை வீட்டிற்கு கொண்டு வருவதோடு, இவர்களது வாழ்வில் பல முன்னேற்றங்களை காண வைக்கும். இவர்கள் வீட்டின் பிரதான கதவில் ஸ்வஸ்திக் சின்னத்தை வைப்பது நல்ல பலனைத் தரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு தெற்கு திசை பார்த்த வீடு நல்ல பலனை அளிக்கும். பொதுவாக தெற்கு நோக்கிய வீடு அசுபமாக கருதப்படுகிறது. ஆனால் இந்த ராசிக்காரர்களுக்கு இந்த திசை தான் நேர்மறை ஆற்றலை கொண்டு வரும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட திசை என்றால் அது மேற்கு திசை தான். மேலும் இந்த ராசிக்காரர்கள் வீட்டை சாலையில் இருந்து உள்ளே தள்ளி வீட்டை கட்ட வேண்டும். இவர்கள் வடமேற்கு திசை பார்த்த வீட்டில் இருக்கக்கூடாது. மேலும் இவர்கள் அதிர்ஷ்டத்தைப் பெற வீட்டின் முன் துளசி செடியை வைக்க வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு உகந்த திசை என்றால், அது தெற்கு பார்த்த வீடு தான். மேலும் இவர்கள் தாம் குடியிருக்கும் வீட்டில் கிழக்கு பதியை விட தெற்கு பகுதியை சற்று உயரமாக வைத்திருக்க வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு தென்கிழக்கு திசை மிகவும் அதிர்ஷ்டமான திசையாகும். பொதுவாக தென்கிழக்கு திசையை நோக்கிய வீடுகள் கட்டப்படுவதில்லை. ஆனால் இந்த ராசிக்காரர்கள் வீட்டை கட்டினால் இந்த திசையில் பிரதான நுழைவாயிலை வைப்பது நல்லது. மேலும் இவர்கள் பிரதான நுழைவாயிலில் ஸ்வஸ்திக் சின்னத்தை வைக்க வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் தென்கிழக்கு திசை பார்த்த வீட்டில் குடியிருப்பது நல்லது. தென்கிழக்கு திசையில் வீட்டின் பிரதான நுழைவாயில் பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுவதில்லை. ஆனால் இந்த ராசிக்காரர்கள் இந்த திசை நோக்கி பிரதான நுழைவாயில் வைப்பது நல்லது. அதுவும் வீட்டின் நுழைவாயிலில் ஸ்வஸ்திக் சின்னத்தை வைப்பது இன்னமும் நல்லது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











