Latest Updates
-
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது!
வாஸ்துப்படி, உங்க ஆபிஸ் டேபிளில் இந்த பொருட்களை வெச்சுருக்காதீங்க.. இல்ல புரமோசனே கிடைக்காது..
Vastu Tips In Tamil: நீங்கள் உங்கள் ஆபிஸில் எவ்வளவு சிறப்பாக வேலை செய்தாலும், உயர் அதிகாரிகளிடம் நற்பெயரை பெற முடியவில்லையா? உங்களிடம் ஒப்படைக்கும் எந்த வேலையையும் உரிய நேரத்தில் முடிக்க முடியவில்லையா?
உங்கள் அலுவலகத்தில் உங்களுக்கு எந்த முன்னேற்றமும் கிடைக்கவில்லையா? அப்படியானால் உங்கள் ஆபிஸ் டேபிளில் உங்களின் முன்னேற்றத்திற்கு தடையை ஏற்படுத்தும் எதிர்மறை விஷயங்கள் இருக்க வாய்ப்புள்ளது.

வாஸ்து சாஸ்திரத்தின் படி, நம்மைச் சுற்றி நேர்மறை ஆற்றல்கள் நிறைந்திருந்தால் தான், எதிர்பார்த்த பலன் கிடைப்பதோடு, முன்னேற்றத்தையும் காண முடியும். வாஸ்து என்பது வீட்டிற்கு மட்டுமின்றி, நாம் வேலை செய்யும் இடத்திற்கும் பொருந்தும்.
வாஸ்து சாஸ்திரத்தில் ஒருவர் வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றத்தைக் காண எந்த மாதிரியான பொருட்கள் இருக்க வேண்டும் மற்றும் எவை இருக்கக்கூடாது என்று குறித்து கூறப்பட்டுள்ளன. இப்போது அலுவலகத்தில் வெற்றியையும், லாபத்தையும் காண வாஸ்து கூறும் சில முக்கியமான விஷயங்கள் குறித்து காண்போம்.
ஆபிஸ் டேபிளின் இடம் மற்றும் திசை
வாஸ்துப்படி, அலுவலகத்தில் ஒருவர் முன்னேற்றத்தைக் காண விரும்பினால், ஆபிள் டேபிள் இருக்கும் இடம் மற்றும் திசையை அவசியம் கவனிக்க வேண்டும். உங்களின் ஆபிஸ் டேபிளுக்கு எதிரே சுவர் இருக்க வேண்டும். அதோடு நீங்கள் உட்காரும் போது, உங்களுக்கு பின்புறம் நுழைவாயில், ஜன்னல் போன்றவை இருக்கக்கூடாது. அதோடு, அலுவலகத்தில் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையை நோக்கி உட்காரக்கூடாது. அலுவலத்தில் எப்போதும் அனைவரும் உங்களைப் பார்க்கும் வகையில் நாற்காலியை வைத்து உட்கார வேண்டும்.
ஆபிஸ் டேபிளில் வைக்க வேண்டியவைகள்
அலுவலகத்தில் முன்னேற்றத்தைக் காண ஆபிஸ் டேபிளில் என்னென்ன பொருட்களை வைக்க வேண்டும் என்று பலரும் கேட்கலாம். நிச்சயம் ஆபிஸ் டேபிளில் பேப்பர் பறக்காமல் இருக்க பேப்பர் வெயிட் இருக்கும். நீங்களும் உங்கள் டேபிளில் கிரிஸ்டல் பேப்பர் வெயிட்டை வைத்திருந்தால், அதை எப்போதும் வடகிழக்கு திசையில் வைத்திருக்க வேண்டும்.
அடுத்தப்படியாக ஆபிஸ் டேபிளில் இருக்கும் மற்றொரு பொருள் வாட்டர் பாட்டில். இந்த வாட்டர் பாட்டிலை வடக்கு நோக்கி வைத்திருக்க வேண்டும். அதன் பின் ஆபிஸ் டேபிளில் முக்கியமான டாக்யூமெண்ட்டுகளை வைத்திருந்தால், அதை எப்போதும் வடக்கு பக்கத்தில் வைத்திருக்க வேண்டும்.
நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் பொருட்கள்
ஆபிஸில் உங்களைச் சுற்றி நேர்மறை ஆற்றல் சுற்றியிருக்க வேண்டுமானால், உங்கள் டேபிளில் குளோப், டேபிள் கடிகாரம், நோட்பேடு-பேனா மற்றும் பிரமீடு ஆகியவற்றை வைத்திருக்கலாம். அதோடு மூங்கில் செடியை ஆபிஸ் டேபிளில் வைத்திருந்தால், அது அதிர்ஷ்டத்தை ஈர்ப்பதோடு, முன்னேற்றத்திற்கும் வழிவகை செய்யும்.
மேஜையில் இவற்றை வைக்காதீர்கள்
வாஸ்துப்படி, எப்போதும் ஆபிஸ் டேபிளில் கருப்பு அல்லது சிவப்பு நிற பொருட்களை எதையும் வைத்திருக்காதீர்கள். அதோடு கண்ணாடி அல்லது கண்ணாடி பொருட்களை டேபிளில் வைத்திருக்கக்கூடாது. இது தவிர கூர்மையான பொருட்கள் எதையும் ஆபிஸ் டேபிளில் வைத்திருக்கக்கூடாது. மேலும் ஆபிஸ் டேபிளில் அமர்ந்து சாப்பிடவோ அல்லது எதையும் குடிக்கவோ கூடாது. அப்படி செய்தால், அது எதிர்மறை ஆற்றலை அதிகரித்து, உங்கள் முன்னேற்றத்திற்கு தடையை ஏற்படுத்தும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
