Latest Updates
-
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
பண்டைய ராஜாக்களும், ராணிகளும் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய பொருட்கள் என்னென்ன தெரியுமா? -
1 பாக்கெட் சேமியாவும், 3 முட்டையும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
வாஸ்து படி உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களை செய்தால் சீக்கிரம் கோடீஸ்வரராகி விடலாம் - ட்ரை பண்ணுங்க -
கோடையில் முகம் எப்பவும் புத்துணர்ச்சியா இருக்கணுமா? அப்ப இந்த தர்பூசணி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சாம்பார் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்: சாம்பாரில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?
உங்க வீட்டில் இந்த பொருட்கள் இருந்தா உடனே தூக்கி போடுங்க.. இல்ல வறுமை உங்கள வாட்டி எடுத்துடும்..
Vastu Tips In Tamil: நாம் குடியிருக்கும் வீடு எப்போதும் நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்க வேண்டும். நேர்மறை ஆற்றல் நிரம்பியிருக்கும் வீட்டில் செல்வம் சேர்வதோடு, வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும். ஒருவரது வீட்டில் எதிர்மறை ஆற்றல் பல விஷயங்களால் அதிகரிக்கலாம். முக்கியமாக நம் வீட்டில் வைத்திருக்கும் சில பொருட்களே அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.
எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும் பொருட்களை வீட்டில் வைத்திருந்தால், அதன் விளைவாக அந்த வீட்டில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடுவதோடு, அந்த வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களிடையே சண்டைகள் அதிகரிக்கும் மற்றும் ஒருகட்டத்தில் வறுமை வாட்டி எடுக்கும்.

அதுமட்டுமின்றி அந்த வீட்டில் உள்ளோர் தங்கள் வாழ்வில் முன்னேற்றத்தைக் காண முடியாது மற்றும் எதிலும் அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்காமல் தோல்வியை சந்திக்க நேரிடும். இப்போது வாஸ்துப்படி எந்த பொருட்களை வீட்டில் வைத்திருக்கக்கூடாது என்பதைக் காண்போம்.
உடைந்த கண்ணாடிகள்
வாஸ்துப்படி கண்ணாடிகளை வீட்டில் வைத்திருப்பது மிகவும் நல்லது. ஆனால் வீட்டில் உடைந்த கண்ணாடிகளை வைத்திருந்தால், அது வீட்டினுள் எதிர்மறை ஆற்றலை அதிகரித்து, துரதிர்ஷ்டத்தையும் அதிகரிக்கும்.
அதோடு உடைந்த கண்ணாடியை வீட்டில் வைத்திருப்பது, அந்த வீட்டில் உள்ளோரின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம். எனவே இப்படிப்பட்ட உடைந்த கண்ணாடிகளை ஒருபோதும் வீட்டில் வைத்திருக்காதீர்கள். உங்கள் வீட்டில் வைத்திருந்தால், இன்றே அதை தூக்கி எறிந்துவிடுங்கள்.
காய்ந்த பூக்கள்
வாஸ்துப்படி, காய்ந்த பூக்களானது மரணத்தின் அறிகுறியாகும். ஆகவே உங்கள் வீட்டை பூக்களால் அலங்கரிப்பீர்களானால், அந்த பூக்களை தினசரி மாற்றுங்கள். முக்கியமாக வீட்டு பூஜை அறையில் சாமிக்கு போடப்படும் பூக்கள் காய்ந்திருந்தால், அதை தினந்தோறும் மாற்றுங்கள். இல்லாவிட்டால், அந்த பூக்கள் எதிர்மறை ஆற்றலை அதிகரித்து, வாழ்க்கையையே மோசமாக்கிவிடும்.
பழங்கால பொருட்கள்
நீங்கள் பழங்கால பொருட்களை சேகரித்து வைப்பதில் ஆர்வம் கொண்டவரா? வாஸ்துப்படி பழங்கால பொருட்களை வீட்டில் வைத்திருக்க விரும்பினால், சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த பழங்கால பொருட்கள் அதன் உரிமையாளர்களின் கதைகளையும், ஆற்றல்களையும் கொண்டிருக்கும்.
ஆகவே அந்த பொருட்களை வீட்டிற்கு கொண்டு வரும் முன் அதன் வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும். மோசமான வரலாற்றைக் கொண்ட பழங்கால பொருட்கள், வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரித்து, பிரச்சனைகளை அதிகரிக்கும்.
உடைந்த கடிகாரம்
வாஸ்துப்படி, வீட்டில் உடைந்த அல்லது ஓடாத கடிகாரங்கள் இருந்தால், அவற்றை உடனே வீட்டில் இருந்து அகற்றுங்கள். ஓடாத கடிகாரங்கள் வீட்டில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். முக்கியமாக இந்த பொருள் வீட்டில் உள்ளோரின் மன அழுத்தத்தை அதிகரிப்பதோடு, துரதிர்ஷ்டத்தையும் ஈர்க்கும். ஆகவே ஓடாமல் இருந்தாலும், கடிகாரம் அழகாக உள்ளது என்று வீட்டில் வைத்திருக்காமல், உடனே தூக்கி எறியுங்கள்.
பழைய காலெண்டர்
நிறைய பேர் காலெண்டரில் உள்ள சாமி போட்டோவிற்காக பழைய காலெண்டரை வீட்டில் வைத்திருப்பார்கள். ஆனால் இப்படி பழைய காலெண்டரை வீட்டில் வைத்திருந்தால், அது வீட்டில் உள்ளோரின் முன்னேற்றத்தில் தடையை ஏற்படுத்தும். எனவே, பழைய காலெண்டர் இருந்தால் உடனே தூக்கி எறிந்துவிடுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











