Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
உங்க கடையில அதிக லாபம் கிடைக்கணுமா? அப்ப வாஸ்துப்படி இத ஃபாலோ பண்ணுங்க...
Vastu Tips For Shop In Tamil: நாம் குடியிருக்கும் வீடாகட்டும், தொழில் செய்யும் இடமாகட்டும், அனைத்தும் வாஸ்துப்படி இருந்தால் தான், அங்கு நல்ல காரியங்கள் நடக்கும். நீங்கள் கடை வைத்துள்ளீர்களா? உங்கள் கடையில் வியாபாரம் செழிப்பா இருக்க வேண்டுமா? அப்படியானால் கடைகளுக்கான வாஸ்து விதிகளைப் பின்பற்றுங்கள்.
கடைகளுக்கான வாஸ்து விதிகளைப் பின்பற்றும் போது, அது அந்த கடையில் செழிப்பைக் கொண்டு வருவதோடு, ஆண்டு முழுவதும் நல்ல வருமானத்தைப் பெற வழிவகை செய்யும். கீழே கடையில் விற்பனையை அதிகரிக்கவும், நல்ல லாபத்தைப் பெறவும் உதவும் சில வாஸ்து குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அவற்றைப் பின்பற்றினால், நிச்சயம் உங்கள் கடையை விரிவாக்கம் செய்வதோடு, நல்ல லாபமும் கிடைக்கும். முக்கியமாக இந்த குறிப்புகள் வெறும் கடைகளுக்கு மட்டுமின்றி, அலுவலகங்களுக்கும் பொருந்தும்.
கடைகளுக்கான சிறந்த திசை
வாஸ்து சாஸ்திரத்தின் படி, கடை செழிப்பாக இருக்க வேண்டுமானால், அந்த கடையானது கிழக்கு, வடக்கு அல்லது வடகிழக்கு திசையைப் பார்த்தவாறு இருக்க வேண்டும். இந்த திசைகளைப் பார்த்திருக்கும் கடைகள் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதோடு, வணிகத்தை அதிகரிக்கும். அதோடு கடையின் நுழைவாயில் சற்று அகலமாக இருக்க வேண்டும். மேலும் நுழைவாயில் மரங்கள், செடிகள் மற்றும் தூண்களை வைத்து தடுக்கக்கூடாது.
எந்த திசையில் கடை இருக்கக்கூடாது?
பொதுவாக மேற்கு, தெற்கு போன்ற திசைகளைப் பார்த்த கடைகளில் வியாபாரம் சிறப்பாக இருக்காது என்று கூறுவார்கள். ஆனால் இது அந்த கடை முதலாளியின் ராசியைப் பொறுத்தது. சிலருக்கு இந்த திசைகளைப் பார்த்த கடைகளில் வியாபாரம் செழிப்பாக இருக்கும். சில நேரங்கள் சிறந்த திசையைக் கொண்ட கடைகளில் கூட வியாபாரம் செழிப்பாக இல்லாமல் போகலாம். எனவே எந்த ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பும், வாஸ்து நிபுணரை அணுகி, அவரது பரிந்துரையின் பேரில் கடையின் திசையை தேந்தெடுங்கள்.
கடை கவுண்டருக்கான வாஸ்து டிப்ஸ்
வாஸ்துப்படி, கடையில் உள்ள கவுண்டர் வட்ட வடிவதற்கு பதிலாக சதுரம், செவ்வகம் போன்ற வடிவில் இருக்க வேண்டும். வட்டம் அல்லது வளைவான வடிவங்களில் இருந்தால், அது நிதி இழப்பை ஏற்படுத்தும். மேலும் கவுண்டரை தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு போன்ற திசையில் வைப்பது நல்லது. அதுவும் பணம் வைக்கும் கவுண்டர் வடக்கு நோக்கி இருப்பது இன்னமும் நல்லது. இந்த திசையை பார்த்து வைத்தால், பணம் அதிகம் சேரும்.
பணப்பெட்டிக்கான வாஸ்து டிப்ஸ்
உங்கள் கடையில் உள்ள பண பெட்டியை வடக்கு பார்த்தவாறு வையுங்கள். வடக்கு திசையானது குபேர திசை என்பதால், இந்த திசையைப் பார்த்தவாறு பணப்பெட்டியை வைக்கும் போது லட்சுமி தேவியின் அருளால் வருமானம் அதிகரிக்கும். மேலும் கடையில் லட்சுமி தேவி மற்றும் விநாயகரின் சிலைகளை வைப்பது நல்லது. முக்கியமாக சிலைகளுக்கு தினமும் பூக்களை வைத்து வழிபட வேண்டும். ஒருவேளை உங்களின் கடையின் லாக்கர் தென்மேற்கு திசையில் இருந்தால், கடையின் நுழைவாயில் வடக்கு திசையைப் பார்த்தவாறு இருக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications