Valentine's Week List 2024: 7 நாட்கள் கொண்டாடப்படும் காதலர் வாரம் பற்றி தெரியுமா?

Valentine's Week List 2024: பிப்ரவரி மாதம் வந்தாலே காதலர்களுக்கு குஷியாக இருக்கும். ஏனெனில் இந்த மாதத்தில் தானே காதலர் தினம் வருகிறது. அதுவும் இந்த காதலர் தினமானது ஒரு நாள் மட்டும் கொண்டாடப்படுவதில்லை, ஒரு வாரம் கொண்டாடப்படுகிறது.

ஒரு வாரம் கொண்டாடப்படும் இந்த காதலர் வாரத்தில் ஒவ்வொரு நாளும் அன்பை வெளிக்காட்டும் வகையில் ஒவ்வொரு தினமும் தனித்துவமாக கொண்டாடப்படுகிறது. அதில் பூக்களை பரிமாறிக் கொள்வது, சாக்லேட்டுகளை பரிசளிப்பது, வாக்குறுதிகளை அளிப்பது என காதலர் தினத்திற்கு முந்தைய வாரம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

Valentines Week List 2024: Rose Day To Kiss Day All You Need To Know About 7 Days Of Love In Tamil

இப்படிப்பட்ட காதலர் வாரம் பிப்ரவர் 07 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று முடிவடைகிறது. இப்போது காதலர் வாரத்தின் அந்த 7 நாட்கள் குறித்து விரிவாக காண்போம். நீங்கள் உங்கள் காதலரை அல்லது வாழ்க்கைத் துணையை சிறப்பாக உணர வைக்க நினைத்தால், இந்த வாரத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ரோஸ் டே (Rose Day)

காதலர் வாரமானது பிப்ரவரி 07 ஆம் தேதி ரோஸ் டேயுடன் தொடங்குகிறது. காதலின் சின்னமாக ரோஜா கருதப்படுகிறது. இந்த ரோஸ் டேயில் தங்கள் துணைக்கு ரோஜாவைக் கொடுத்து அன்பை பரிமாறிக் கொள்வார்கள். ரோஜாவில் பல வண்ணங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு உணர்வை குறிக்கும். அதில் சிவப்பு அன்பைக் குறைக்கிறது, மஞ்சள் நட்பைக் குறிக்கிறது, வெள்ளை அமைதியைக் குறிக்கிறது.

ப்ரோபோஸ் டே (Propose Day)

காதலர் வாரத்தின் இரண்டாம் நாளான பிப்ரவரி 08 ஆம் தேதி கொண்டாடப்படுவது ப்ரோபோஸ் டே ஆகும். இந்நாளில் காதலர்கள் தங்கள் காதலரிடம் தங்கள் காதல் உணர்வுகளை வெளிப்படுத்தி, உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல, மனதை வருடும் வகையில் கவிதையாக காதலை வெளிப்படுத்துவார்கள்.

சாக்லேட் டே (Chocolate Day)

ஸ்வீட் என்றாலே முதலில் நினைவிற்கு வருவது சாக்லேட் தான். காதலர் வாரத்தின் மூன்றாம் தினமான பிப்ரவரி 09 ஆம் தேதி கொண்டாடப்படுவது தான் சாக்லேட் டே. இந்நாளில் காதலர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்தும் வகையில் தனது அன்புக்குரியவருக்கு சாக்லேட்டுகளை பரிமாறிக் கொள்வார்கள். சிலர் தங்கள் காதலருக்கு தங்கள் கைகளாலேயே சாக்லேட்டை செய்து பரிசளிப்பார்கள். ஒருவேளை சாக்லேட் பிடிக்காவிட்டால், ஏதாவது ஸ்வீட் செய்து கொடுத்து அசத்துவார்கள்.

டெடி டே (Teddy Day)

காதலர் வாரத்தின் 4 ஆவது நாளான பிப்ரவரி 10 ஆம் தேதி கொண்டாடப்படுவது தான் டெடி டே. இந்நாளில் காதலர்கள் அன்பின் தூதர்களாக கருதப்படும் டெடி பியர் பொம்மைகளை பரிசாக பரிமாறிக் கொள்வார்கள். டெடி பியர் அரவணைப்பு மற்றும் ஆறுதலான இருப்புக்கு பெயர் பெற்றவை. எனவே ஒரு உறவில் அரவணைப்பு மற்றும் ஆறுதலை குறிக்கும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

ப்ராமிஸ் டே (Promise Day)

காதலர் வாரத்தின் 5 ஆவது நாளான பிப்ரவரி 11 ஆம் தேதி வருவது தான் ப்ராமிஸ் டே. இந்நாளில் காதலிப்பவர்கள் தங்கள் காதலன்/காதலியிடம் அன்பு, நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு உணர்வை வளர்க்கும் வகையில் மனதார வாக்குறுதிகளை அளிப்பார்கள்.

ஹக் டே (Hug Day)

காதலர் வாரத்தின் 6 ஆவது நாளான பிப்ரவரி 12 ஆம் தேதி வருவது தான் ஹக் டே. பொதுவாக கட்டிப்பிடிப்பது ஒரு அன்பை, ஆறுதலை, அரவணைப்பைக் குறிக்கிறது. இப்படிப்பட்ட ஒன்றை தனது காதலன்/காதலியிடம் இருந்து பெறும் போது, அது மனதில் உள்ள கவலைகளை நீக்க உதவுகிறது. மொழி நம் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்தத் தவறும் போது, இம்மாதிரியான உடல் பாசம் அதிசயங்களைச் செய்கிறது.

கிஸ் டே (Kiss Day)

காதலர் வாரத்தின் 6 ஆவது நாளான பிப்ரவர் 13 ஆம் தேதி வருவது தான் கிஸ் டே. காதலிப்பவர்கள் இந்நாளில் முத்தத்தைப் பரிமாறிக் கொள்வதன் மூலம் அன்பை வெளிப்படுத்துவதோடு, உறவை வலுபடுத்துகிறார்கள்.

காதலர் தினம் (Valentine's Day)

காதலர் வாரத்தின் கடைசி நாளான பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படுவது தான் காதலர் தினம். இந்நாளில் காதலிப்பவர்கள் தங்கள் காதலருக்கு பரிசுகளை பரிமாறிக் கொள்வது, ஒன்றாக நேரத்தை செலவிடுவது மற்றும் பலவிதமான ஆச்சரியங்களை அளித்து சிறப்பாக உணர வைப்பார்கள்.

நீங்கள் யாரையேனும் காதலித்து வந்தால் அல்லது உங்கள் காதலை தெரிவிக்க விரும்பினால், இந்த காதலர் வாரத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Story first published: Monday, February 5, 2024, 21:47 [IST]
Desktop Bottom Promotion