Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
Valentines Week 2026: ஒரு வாரம் கொண்டாடப்படும் காதலர் வாரம்.. எப்போது தொடங்குகிறது தெரியுமா?
Valentines Week 2026: பிப்ரவரி மாதம் என்றாலே நினைவிற்கு வருவது காதலர் தினம் தான். இந்த காதலர் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதே வேளையில் காதலை அணுஅணுவாக அனுபவித்து கொண்டாடும் வகையில் காதலர் தினத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே காதலர் வாரம் கொண்டாடப்படுகிறது.
அதுவும் பிப்ரவரி 07 ஆம் தேதி ரோஸ் டேயில் தொடங்கி பிப்ரவரி 13 ஆம் தேதி கிஸ் டேயில் முடிவடைகிறது. இந்த ஒவ்வொரு நாளும் காதலிப்பவர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்த தனித்துவமான வழிகளை வழங்குகிறது.

நீங்கள் காதலித்துக் கொண்டிருந்தாலோ அல்லது உங்கள் காதலை புதுமையான முறையில் வெளிப்படுத்த விரும்பினாலோ, இந்த காதலர் வாரத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த ஒவ்வொரு நாளும் உங்கள் காதலை வெளிப்படுத்தும் விதமானது, ஒரு இனிமையான நினைவுகளாக மாறும். இப்போது ஒரு வாரம் கொண்டாடப்படும் காதலர் வாரத்தின் ஒவ்வொரு நாள் என்னவென்றும், அந்நாளில் என்ன செய்வார்கள் என்பதையும் காண்போம்.
பிப்ரவரி 7: ரோஸ் டே
காதலர் வாரத்தின் முதல் நாளில் கொண்டாடப்படுவது தான் ரோஸ் டே. இந்த நாளன்று காதலிப்பவர்கள் தங்கள் அன்புக்குரியவருக்கு ரோஜாப் பூக்களை கொடுத்து காதலை தெரிவிப்பார்கள். அதுவும் இந்நாளில் காதலின் சின்னமான சிவப்பு நிற ரோஜாவை வழங்குவது சிறந்தாக இருக்கும்.
பிப்ரவரி 8: ப்ரொபோஸ் டே
காதலர் வாரத்தின் இரண்டாவது நாளில் கொண்டாடப்படுவது தான் ப்ரொபோஸ் டே. இது உணர்வுகளை வெளிப்படுத்த மிக அழகான நாள். இந்த நாளன்று காதலிப்பவர்கள் தங்கள் அன்புக்குரியவரிடம் தங்கள் காதலை வித்தியாசமான முறையில் தெரிவிக்கலாம். அதுவும் அவர்கள் எதிர்பார்க்காத அளவு மற்றும் மறக்க முடியாத அளவில் இருந்தால், இன்னும் சூப்பராக இருக்கும். எனவே ப்ளான் செய்து கொள்ளுங்கள்.
பிப்ரவரி 9: சாக்லேட் டே
காதலர் வாரத்தின் மூன்றாவது நாளில் கொண்டாடப்படுவது சாக்லேட் டே. இது உறவுகளில் கசப்பை நீக்கி இனிமையை அதிகரிக்கும் நாள். இந்த நாளில் காதலன் காதலிக்கோ அல்லது காதலி காதலனுக்கோ, விருப்பமான சாக்லெட் வாங்கி கொடுத்து காதலை வெளிப்படுத்துவார்கள்.
பிப்ரவரி 10: டெடி டே
காதலர் வாரத்தின் நான்காவது நாளில் கொண்டாடப்படுவது தான் டெடி டே. பெண்களுக்கு டெடி பியர் என்றால் மிகவும் பிடிக்கும். எனவே பிப்ரவரி 10 நாள் கொண்டாடப்படும் டெடி டே அன்று, காதலிப்பவருக்கு அழகான ஒரு பெரிய டெடி பியரை வாங்கிக் கொடுக்கலாம். குறிப்பாக அந்த டெடி பியரில் 'ஐ லவ் யூ' என்று எழுதியிருந்தால், இன்னும் சூப்பராக இருக்கும்.
பிப்ரவரி 11: ப்ராமிஸ் டே
காதலர் வாரத்தின் ஐந்தாவது நாளில் கொண்டாடப்படுவது தான் ப்ராமிஸ் டே. இந்த நாளன்று அனைத்து காதலர்களும் தங்கள் காதலன்/காதலியிடம், அவர்களுக்கு நம்பிக்கை தரும் வகையில், வாக்குறுதியைக் கொடுப்பார்கள். வாக்குறுதி என்பது சிலருக்கு விளையாட்டுத் தனமாக இருக்கும். ஆனால் இந்த நாளன்று செய்யப் போகும் வாக்குறுதியை மனதளவில் செய்து கொடுத்தால், உங்கள் மீது அன்பும் பெருகி, நம்பிக்கையும் அதிகமாகும்.
பிப்ரவரி 12: ஹக் டே
காதலர் வாரத்தின் ஆறாவது நாளில் கொண்டாடப்படுவது தான் ஹக் டே. எதுவும் சொல்லாமலேயே ஒரு கட்டிப்பிடிப்பு நிறைய விஷயங்களைச் சொல்லும். எனவே உங்கள் காதலை சொல்லாமலேயே உணர வைக்க நினைத்தால், இந்நாள் மிகச்சிறந்த நாள். அதற்கு சிறிது நேரம் கட்டிப்பிடியுங்கள். அதுவும் அன்போடு, அக்கறையோடு, எப்போதும் உன்னுடன் இருப்பேன் என்று அவர்களுக்கு உணர்த்தும் வகையில் அது இருக்க வேண்டும்.
பிப்ரவரி 13: கிஸ் டே
காதலர் வாரத்தின் ஏழாவது நாளில் கொண்டாடப்படுவது தான் கிஸ் டே. நம்பிக்கையும் நெருக்கமும் மௌனத்தில் வளரும். இந்த நாளன்று நீங்கள் உங்கள் அன்பை முத்தத்தின் வாயிலாக வெளிப்படுத்தலாம். வட நாடுகளில் எல்லாம் காதலர்கள் உதட்டோடு உதடு முத்தம் கொடுத்து, தங்கள் அன்பைப் பரிமாறிக்கொள்வார்கள். நீங்கள் எப்படி உங்கள் அன்பை பரிமாறப் போறீங்க?
பிப்ரவரி 14: வேலன்டைன்ஸ் டே
கடைசியாக பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் காதலர்கள், தங்கள் அன்புக்குரியவருடன் தங்கள் நேரத்தை செலவழித்து, மனதில் இருக்கும் இன்பம் மற்றும் துன்பத்தை வெளிப்படுத்தி, சந்தோஷமாக கொண்டாடி மகிழ்வார்கள்.
இந்த காதலர் வாரம் என்பது வெறும் பரிசுகள் மற்றும் பதிவுகளைப் பற்றியது மட்டுமல்ல. உறவுகளுக்கு நேரம், மரியாதை மற்றும் தொடர்பு தேவை என்பதை நினைவூட்டுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications