Latest Updates
-
Chronic Disease Awareness Day 2026: நாள்பட்ட நோய்களும்.. அவற்றின் அறிகுறிகளும்.. - விளக்கும் டாக்டர்! -
ஜூலை 16-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது... -
1 சௌ சௌ காயும், 5 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஜூலை 16-ல் சனி-குரு உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக்கப் போகுதாம் -
ஜூலை 14-ல் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
1/4 கப் கொள்ளு இருந்தா இந்த கர்நாடகா பேமஸ் சட்னியை ட்ரை பண்ணுங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
பன்னீரை இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களை ஏமாற்றும் திருட்டு குணம் உள்ளவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
முகத்தில் கருந்திட்டுக்கள் அதிகமா இருக்குதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க..
Valentines Day 2024: தனித்துவமான சில காதலர் தின மரபுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
Valentines Day 2024: உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் காதலர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. காதலிக்கு பூங்கொத்தை வழங்குவதில் இருந்து, வாழ்த்து மடல் அனுப்புவது வரை உலகம் முழுவதும் காதல் தினம் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் ஒன்று. இருப்பினும் இந்த காதலர் தினம் இப்போது வந்ததில்லை. பழங்காலத்தில் இருந்தே கொண்டாடப்படுகிறது.
அந்த காலத்தில் கொண்டாடப்பட்ட காதலர் தினத்துக்கும், இப்போதைய காதலர் தினத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. வெவ்வேறு காலங்கள், வெவ்வேறு விதமான கொண்டாட்டங்கள், வெவ்வேறு விதமான கலாச்சாரங்கள் என வித்தியாசமான மரபுகளும் காதலர் தினத்தில் உள்ளன. அப்படிப்பட்ட தனித்துவமான மரபுகள் பற்றி தான் இக்கட்டுரையில் நாம் காணப் போகிறோம்.

காதலர் தின ரோஜாக்களின் அர்த்தங்கள்
காதலர் தினத்தன்று காதலர்கள் ஒருவருக்கொருவர் ரோஜாக்களை பரிமாறிக் கொள்வார்கள். 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பூங்கொத்துகள் பலவிதமாக காணப்பட்டன. ஒவ்வொரு பூக்களுக்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு.
நீங்கள் மஞ்சள் நிற அகாசியா என்ற பூவை கொடுத்தால் அது உங்களின் "மறைக்கப்பட்ட காதலை" கூறுவதாக அர்த்தம். இதுவே நீங்கள் ஜான்குயில்ஸ் பூக்களை கொடுத்தால் நான் உன் பாசத்தை பெற விரும்புகிறேன் என்று அர்த்தம். உங்கள் காதலரின் நம்பிக்கையை பெற நினைத்தால் ஸ்னோ டிராப்ஸ் மலர்களை பரிசாக கொடுங்கள்.
இப்படி பல வகையான பூக்கள் 19 வது நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டது. நீங்கள் எந்த வகையான பூக்களைக் கொடுக்கிறீர்கள் என்பதை பொறுத்து உங்கள் அன்பை வெளிப்படுத்துவீர்கள். 19 நூற்றாண்டில் பூங்கொத்துகள் மலிவு விலையில் கிடைத்தன.
புதிர் பையை பரிசளித்தல்
18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் புதிர் பைகள் பரிசுப் பொருளாக இருந்தன. இந்த புதிர் பைகளில் ஏகப்பட்ட காதல் கவிதைகள் சிக்கலான மடிந்த தாள் போன்ற அமைப்புகள் இருக்கும். மடிப்புகளை திறக்க திறக்க வெவ்வேறு காதல் வசனங்கள் இருக்கும். இறுதியில் அதன் மையத்தில் ஒரு காதல் பரிசும் இருக்கும்.
கருப்பு காதல் தினம்
ஆப்ரிக்கன் அமெரிக்கன் ஹாலிடே அசோசியேஷனின் நிறுவனர், 1993 இல் கருப்பு காதலர் தினத்தை அறிமுகப்படுத்தினர். கறுப்பு காதல் தினத்திற்காக, ஹேண்டி-கெண்டி "குவான்சா" போன்ற கொள்கைகளின் அடிப்படையில் ஒரு அமைப்பை நிறுவினார். கருப்பு தினமானது நம் மீதமுள்ள அன்பைக் காட்டுகின்றன. கருப்பு காதல் தினம் பிப்ரவரி 13 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த தினம் கருப்பின மக்களுக்காக கொண்டாடப்படுகிறது.
பன்றிகள் மற்றும் இஞ்சி பிரட்
இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு ஜெர்மனியில் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. ஜெர்மனியில் அதிர்ஷ்டத்தின் அடையாளமாக பன்றிகளை காதலர் பரிசுகளில் சேர்த்தனர். ஜெர்மனியர்கள் காதலர் தினத்திற்காக லெப்குசென் எனப்படும் பெரிய இதய வடிவ ஜிஞ்சர் பிரட் குக்கீகளையும் வழங்கினர்.
நட்புக் கொண்டாட்டம்
பிப்ரவரி 14 என்பது காதலர்களுக்காக மட்டுமல்ல நட்புக்காகவும் கொண்டாடப்படுகிறது. இது காதல் மற்றும் நட்பின் நாளாக பார்க்கப்படுகிறது. இந்த நாளில் நட்பையும் கெளரவிக்க வேண்டும். எல் சால்வடாரில், அமிகோ சீக்ரெட்டோ, சீக்ரெட் ஃபிரண்ட் என அழைக்கப்படும் ஒரு பாரம்பரியத்தில் மக்கள் தங்கள் நண்பர்கள் பெயர்களை வரைந்து பரிசுகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள்.
1980 களில், எஸ்டோனியாவும் பின்லாந்தும் பிப்ரவரி 14 அன்று காதல் மற்றும் நட்புடன் பிளாட்டோனிக் காதல் மற்றும் நட்பை அடையாளமாக காட்ட முற்பட்டது. இந்த நாளில் காதலர்களுடன் பரிசுகளை பரிமாறிக் கொள்வதற்கு பதிலாக இரு நாடுகளில் உள்ளவர்கள் நண்பர்களுடன் தங்கள் நட்பை பரிமாறிக் கொள்கிறார்கள்.
பிலிப்பைன்ஸில் திருமணங்கள்
சொந்தத் திருமணங்களைச் செய்ய முடியாத தம்பதிகளுக்கு உதவ, பிலிப்பைன்ஸில் உள்ள உள்ளூர் அரசாங்கங்கள் காதலர் தினத்தன்று நிறைய திருமணங்களை நடத்தி வைக்கின்றனர். பிப்ரவரி 14, 2010 அன்று, மணிலா புறநகரில் நடந்த வெகுஜன விழாவில் 1,500 ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர். பிலிப்பைன்ஸில் பிப்ரவரி 14 திருமண நாளாக பார்க்கப்படுகிறது.
வாலண்டைன் சாக்லேட்
ஜப்பானில், பெண்கள் பாரம்பரியமாக ஆண்களுக்கு வாலண்டைன் சாக்லேட்டை வழங்குகின்றனர். 1970களில் ஜப்பானிய டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள் இந்த நடைமுறையை ஊக்குவித்தன. அதன்படி பெண்கள் அங்குள்ள ஆண்களுக்கு காதலர் தின சாக்லேட்டுகளை வழங்குகின்றனர். Giri choco, obligation chocolate போன்ற சாக்லேட்டுகள் பரிசாக கொடுக்கப்படுகிறது.
கரப்பான்பூச்சிக்கு பெயரிடுதல்
இந்த காதல் மரபுகள் மிகவும் வித்தியாசமானது. சிகாகோவின் புரூக்ஃபீல்ட் மிருகக்காட்சி சாலையானது உங்கள் முன்னாள் காதலன்/காதலி, அதாவது காதல் தோல்விக்கு பிறகு கரப்பான்பூச்சிக்கு பெயரிடுவதை வழங்குகிறது. இதன்படி உங்களுக்கு பிடித்த பெயர்களை கரப்பான்பூச்சிக்கு இட்டு மகிழலாம். சான் அன்டோனியோ மிருகக்காட்சிசாலையானது பெயரிடப்பட்டதை நினைவுகூரும் வகையில் சில வகையான சான்றிதழ்களையும் வழங்குகிறார்கள்.



Click it and Unblock the Notifications