Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம்
காதலர் தினத்தன்று மறந்தும் இந்த பொருட்களை பரிசா கொடுத்துடாதீங்க.. இல்ல பிரேக்-அப் ஆயிடும்...
Valentine's Day 2024: காதலர்களுக்கான காதலர் தினத்திற்கு முன், காதலை சிறப்பாக கொண்டாடும் வகையில் ஒரு வாரம் காதலர் வாரம் கொண்டாடப்படுகிறது. அதுவும் இது பிப்ரவரி 07 ஆம் தேதி ரோஜா தினத்தில் தொடங்கி பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தில் முடிவடைகிறது. இந்த காதலர் வாரத்தின் ஒவ்வொரு நாளும் காதலி/காதலனுக்கு பரிசுகளை வழங்கி தங்கள் அன்பை வெளிப்படுத்துவார்கள்.
ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒருவருக்கு பரிசுகளை கொடுக்கும் போது ஒருசில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். பரிசுகளை கொடுப்பதில் செய்யும் தவறுகளால் உறவே முறிவடையும் வாய்ப்புள்ளது. எனவே காதலன்/காதலிக்கு காதலர் தின பரிசுகளை கொடுக்கும் போது வாஸ்து சாஸ்திரம் கூறும் விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்.

குறிப்பாக எந்த மாதிரியான பரிசுகளை வழங்கக்கூடாது என்பதை அறிந்து, அவற்றைக் காதலர் தினத்தன்று கொடுப்பதைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால் அந்த பரிசுகள் உங்கள் காதலை முறித்து, பிரிவினைக்கு வழிவகுத்துவிடும். இப்போது காதலர் தினத்தன்று காதலன்/காதலிக்கு எந்த மாதிரியான பரிசுகளை வழங்கக்கூடாது என்பதைக் காண்போம்.
தாஜ்மஹால்
காதலிக்கும் பலர் தங்கள் காதலருக்கு பரிசாக கொடுக்கும் ஒரு பொதுவான பொருள் தான் தாஜ்மஹால். என்ன தான் தாஜ்மஹால் அன்பின் சின்னமாக கருதப்பட்டாலும், அதை ஒருபோதும் காதலருக்கு பரிசாக கொடுக்கக்கூடாது. ஏனெனில் தாஜ்மஹாலில் மும்தாஜின் கல்லறை உள்ளது. வாஸ்து சாஸ்திரத்தில், கல்லறைகள் உறவுகளில் எதிர்மறையை உருவாக்குகின்றன. எனவே இதை காதலிக்கும் காதலி/காதலனுக்கு பரிசாக கொடுத்தால், அது அந்த காதலில் விரிசலை ஏற்படுத்திவிடும்.
கைக்குட்டை
கைக்குட்டையை எப்போதும் யாருக்கும் பரிசளிக்கக்கூடாது. ஏனெனில் வாஸ்து சாஸ்திரத்தின் படி, கைக்குட்டையை பரிசாக கொடுப்பது உறவில் கசப்பை ஏற்படுத்தி, பிரிவினையை உண்டாக்கிவிடும். அதேப் போல் துண்டையும் பரிசாக கொடுக்கக்கூடாது. எனவே இந்த காதலர் தினத்தில் உங்கள் காதலி/காதலனுக்கு ஸ்பெஷலாக கைக்குட்டை கொடுக்கும் எண்ணம் இருந்தால், அதை உடனே கைவிடுங்கள்.
காலணிகள்
உங்கள் காதலன்/காதலிக்கு காலணிகள் பிடிக்கும் என்று காதலர் தின பரிசாக காலணியை வழங்கிவிடாதீர்கள். ஏனெனில் வாஸ்துப் படி, காலணிகள் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கின்றன. எனவே இப்படிப்பட்ட காலணிகளை பரிசாக வழங்கினால், அது உறவுகளில் பதற்றத்தை அதிகரித்து உறவுகளில் விரிசலை ஏற்படுத்தும்.
கருப்பு நிற ஆடைகள்
கருப்பு நிற ஆடைகள் உங்கள் காதலருக்கு பிடிக்கலாம். ஆனால் அந்த கருப்பு நிற ஆடைகளை பரிசாக கொடுக்க வேண்டாம். ஏனெனில் கருப்பு நிறமானது எதிர்மறை ஆற்றலின் அடையாளம். எனவே காதலர் தினத்தன்று காதலருக்கு கருப்பு நிற ஆடைகளை பரிசளிப்பதையோ, கருப்பு நிற ஆடைகளை அணிவதையோ தவிர்த்திடுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications