Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
Valentines Day 2024: காதலர் தினத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு காதலில் வெற்றி கிடைக்க போகுது.. உங்க ராசி என்ன?
Valentines Day 2024 Horoscope In Tamil: ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜோதிட ரீதியாக, காதலர் தினத்தன்று கிரகங்களின் நிலைகளால் சிங்கிளாக இருக்கும் ஒருசில ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த காதல் கைக்கூடும். அதே சமயம் திருமணமான சில ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையிடம் இருந்து எதிர்பாராத பரிசுகளையும், ஆச்சரியங்களையும் பெறுவார்கள்.
கிரகங்களில் சுக்கிரன் தான் காதலுக்கு காரணியாவார். சுக்கிரனின் அருள் இருந்தால், காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் இனிமையாகவும் இருக்கும். இப்போது 2024 ஆம் ஆண்டின் காதலர் தின ராசிபலன்களைக் காண்போம். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் காதலர் தினம் எப்படி இருக்கும் என்பதை விரிவாக காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு காதலர் தினமானது உற்சாகத்தையும், சாகசத்தையும் தரக்கூடும். திருமணமானவர்கள் அல்லது காதலித்து வருபவர்கள், தங்கள் துணையிடமிருந்து ஆச்சரியங்களை எதிர்பார்க்கலாம். திருமணமாகாமல் சிங்கிளாக இருந்தால், இன்று உங்கள் மனதிற்கு பிடித்த ஒருவரை சந்திக்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! நீங்கள் ஒரு ரொமான்டிக்கான காதலர் தினத்தை அனுபவிப்பீர்கள். திருமணமானர்கள் இன்று வாழ்க்கைத் துணையுடன் ஒரு ரொமான்டிக்கான கேண்டில்லைட் டின்னரை எதிர்பார்க்கலாம். சிங்கிளாக இருப்பவர்கள் தங்கள் நெருங்கிய நண்பர்களுடன் நேரத்தை செலவழித்து ஆறுதல் அடைவார்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்கார்களுக்கு இந்த காதலர் தினமானது கலகலப்பான உரையாடல்கள் மற்றும் விளையாட்டுத்தனமான தொடர்புகளால் நிரம்பியிருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் ஒரு குறுகிய தூர பயணத்தை மேற்கொள்ளலாம். திருமணமாகாதவர்கள் நகைச்சுவையான மற்றும் வசீகரமான ஒருவரால் ஈர்க்கப்படலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் துணையிடமிருந்து உணர்ச்சிபூர்வமான நெருக்கத்தையும் அனுபவிக்கலாம். இன்று ரொமான்டிக் டின்னர் அல்லது சிந்தனைமிக்க பரிசை எதிர்பார்க்கலாம். சிங்கிளாக இருப்பவர்கள் கடந்த கால காதல் அல்லது பழைய நண்பர்களுடன் மீண்டும் இணையலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த காதலர் தினம் கவர்ச்சியாகவும், ஆடம்பரமாகவும் இருக்கும். திருமணமானவர்கள் இன்று வாழ்க்கை துணையிடம் இருந்து ஒரு அற்புதமான மற்றும் ஆடம்பரமான ஒரு பரிசைப் பெற வாய்ப்புள்ளது. திருமணமாகாமல் சிங்கிளாக இருப்பவர்கள் ஒருவரால் இன்று ஈர்க்கப்படலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த காலர் தினம் அர்த்தமுள்ளதாக இருக்கும். வாழ்க்கைத் துணையிடம் இருந்து ஒரு அற்புதமான பரிசை எதிர்பார்க்கலாம். மிங்கிளாகாமல் சிங்கிளாக இருப்பவர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற ஒருவரை இன்று சந்திக்க வாய்ப்புள்ளது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு காதலர் தினமானது சற்று ரொமான்டிக்காக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் மாலை வேளையில் நல்ல தரமான நேரத்தை செலவிட வாய்ப்புள்ளது. சிங்கிளாக இருப்பவர்கள் தங்கள் வசீகரமான தோற்றத்தால், யாரேனும் ஒருவரை ஈர்க்க வாய்ப்புள்ளது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு காதலர் தினம் சற்று தீவிரமாக இருக்கும். உங்கள் துணையுடன் உணர்ச்சி ரீதியான மற்றும் நெருக்கமான தருணங்களை இன்று எதிர்பார்க்கலாம். திருமணமாகாமல் இருப்பவர்க்ள புதிரான ஒருவரால் ஈர்க்கப்பட வாய்ப்புள்ளது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த காதலர் தினம் சாகசமாக இருக்கக்கூடும். இன்று வாழ்க்கைத் துணையுடன் உற்சாகத்தையும், புதிய அனுபவங்களையும் சந்திக்க லாம். சிங்கிளாக இருப்பவர்கள் சற்ற அமைதியற்றவர்களாக உணரலாம் மற்றும் தங்கள் அன்பை பகிர்ந்து கொள்ளும் ஒருவரை சந்திக்கலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு காதலர் தினம் அருமையாக இருக்கும். திருமணமானவர்கள் வாழ்க்கைத் துணையுடன் ரொமான்டிக் டின்னரை எதிர்பார்க்கலாம். அதுவே திருமணமாகாதவர்கள் நம்பகமான மற்றும் பொறுப்பான ஒருவரால் ஈர்க்கப்பட்டு, காதலில் விழ வாய்ப்புள்ளது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த காதலர் தினம் வழக்கத்திற்கு மாறானதாகவும் தனித்துவமாகவும் இருக்கக்கூடும். வாழ்க்கைத் துணையிடம் இருந்து ஆச்சரியங்களையும், எதிர்பாராத திருப்பங்களையும் எதிர்பார்க்கலாம். சிங்கிளாக இருப்பவர்கள் விசித்திரமான ஆர்வங்கள் மற்றும் மதிப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒருவரை சந்திக்கலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு காதலர் தினம் ரொமான்டிக்காக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் ரொமான்டிக் பயணத்தை மேற்கொள்ள வாய்ப்புள்ளது மற்றும் அவர் கொடுக்கும் பரிசுகளால் அசந்து போவீர்கள். சிங்கிளாக இருப்பவர்கள் கலை உணர்வுகளை பகிர்ந்து கொள்ளும் ஒருவரை இன்று சந்திக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications