Latest Updates
-
அரிசி மாவும், தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
அமெரிக்க டாலரில் $ சின்னம் ஏன் உள்ளது தெரியுமா? அதன் அர்த்தமும், வரலாறும் என்ன தெரியுமா? -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
Varalakshmi Vratam 2026: வரலட்சுமி விரதத்தின் போது டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
முட்டை குழம்பை இந்த பக்குவத்துல செய்யுங்க.. மட்டன் குழம்பு ருசியில செமயா இருக்கும்.. -
உங்க கல்லீரலில் பிரச்சனை வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 3 காற்கறிகளை வாரந்தோறும் சாப்பிடுங்க.. -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
பாபா வங்காவின் கணிப்புப்படி பெட்ரோல் விலையில் என்னென்ன மாற்றம் வரப்போகிறது தெரியுமா? -
சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் 22 முதல் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 6 ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
கறிவேப்பிலை சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..
Valentines Day 2024: வருகிற காதலர் தினத்தில் இந்த 4 ராசிக்காரர்களின் காதல் தேடல் முடிவுக்கு வரப்போகுது...
Valentines Day 2024 Horoscope: காதலர் தினம் வரப்போகிறது. ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினமானது பிப்ரவரி 15 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் காதலர்கள் தங்கள் காதலை தங்கள் வாழ்க்கைத் துணையிடம் தெரிவித்து சிறப்பு பரிசுகளை கொடுத்து ஆச்சரியமளிப்பார்கள்.
இப்படி ஒரு புறம் இருக்க, திருமணமாகாதவர்கள் தங்கள் மனதிற்கு பிடித்தவரிடம் தங்கள் காதலை தெரிவிக்க காத்துக் கொண்டிருப்பார்கள். எதுவாயினும் ஒருவரது ஜாதத்தில் உள்ள கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து தான் ஒருவருக்கு காதல் துணை அமையுமா, அமையாதா என்பதெல்லாம் உள்ளது.

இந்த ஆண்டின் பிப்ரவரி 14 ஆம் தேதி கிரக நிலைகளைப் பொறுத்தவரை, சில ராசிக்காரர்களுக்கு காதல் ரீதியாக அதிர்ஷ்டமானதாக இருக்கும். இப்போது பிப்ரவரி 14 ஆம் தேதி கிரக நிலைகளைப் பொறுத்து எந்த ராசிக்கும் பிப்ரவரி 14 ஆலம் தேதி அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 7 ஆவது வீடு குரு பகவானின் செல்வாக்கின் கீழ் உள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் இந்த பிப்ரவரி 14 ஆம் தேதி புதிய உறவில் ஈடுபடலாம். திருமணமாகாதவர்கள் தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக்கும் வாழ்க்கைத் துணையை கண்டுபிடிப்பார்கள். திருமணமானவர்கள் அல்லது காதலிப்பவர்கள், ஆழமான உறவைப் பெறுவார்கள்.
கடகம்
வருகிற 2024 பிப்ரவரி 14 ஆம் தேதி கடக ராசிக்காரர்கள் புதிய வாழ்க்கைத் துணையைப் பெறும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே காதலித்து வந்தால், அவர்களுக்கு திருமணம் நடப்பதற்கான வாய்ப்பு உள்ளது. மொத்தத்தில் இதுவரை காதலியை பெற முடியாமல் அலைந்து கொண்டிருந்தவர்களின் காதல் தேடல் முடிவுக்கு வரப் போகிறது.
விருச்சிகம்
நீங்ள் விருச்சிக ராசிக்காரராக இருந்து, காதலுக்கும் உங்களுக்கும் இதுவரை செட் ஆகாமல் இருந்திருந்தால், இந்த ஆண்டு காதலர் தினத்தில் ஒரு பெரிய ஆச்சரியம் காத்துக் கொண்டிருக்கிறது. அதாவது காதல் கிடைக்காமல் இருந்தவர்கள், இந்த ஆண்டில் தங்கள் காதல் துணையைப் பெறுவார்கள். ஏற்கனவே உறவில் இருப்பவர்களின் காதல் வலுவடையும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இதுவரை உங்களுக்கு எந்த காதலும் அமையாமல் இருந்தால், இந்த ஆண்டு காதலர் தினத்தில் நிச்சயம் உங்கள் காதல் துணையைப் பெறுவீர்கள். காதலித்து வருபவர்கள் தங்கள் துணையுடன் போதுமான நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். உறவு வழக்கத்தை விட அதிகமாக வலுவடையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications