Valentine's Day 2024: காதலர் தினத்துக்கு எந்த கலர் டிரெஸ் போட போறீங்க.. எந்த நிறத்துக்கு என்ன அர்த்தம்..

Valentine's Day 2024: ஒவ்வொரு ஆணும் பெண்ணும் பிப்ரவரி 14 ஆம் தேதியான காதலர் தினத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பார்கள். ஏனெனில் தங்கள் மனதிற்கு பிடித்தவர்களிடம் தங்கள் காதலை வெளிப்படுத்த அல்லது ஒப்புக்கொள்ள சரியான வாய்ப்பை காதலர் தினம் அளிக்கிறது.

காதலர் தினத்திற்கு முன் ரோஜா தினம் முதல் முத்த தினம் வரை ஒரு வாரம் காதலர் வாரம் கொண்டாடப்படுகிறது. இருப்பினும் காதலர் தினத்தன்று ஒவ்வொருவரும் தங்களை அழகாக வெளிக்காட்ட விரும்புவார்கள். முக்கியமாக காதலர் தினத்தன்று அணியும் ஆடைகளின் நிறங்கள் காதலைப் பற்றிய ஒருவரது எண்ணத்தை வெளிப்படுத்துகிறது. எனவே இந்நாளில் அணியும் ஆடையின் நிறத்தை சரியாக தேர்வு செய்து அணிய வேண்டும்.

Valentines Day 2024: Colour Dress Code For Valentines Day and Their Meanings In Tamil

உங்களுக்கு இந்த காதலர் தின ஆடைக் குறியீடு பற்றி தெரியுமா? அதாவது, இந்நாளில் தேர்வு செய்யும் ஒவ்வொரு நிற ஆடையும் ஒவ்வொரு அர்த்தத்தைக் கொண்டுள்ளது. அந்த நிறத்தைக் கொண்டு உங்களின் உறவு நிலை அல்லது உணர்ச்சிகள் என்னவென்பதை மற்றவருக்கு பேசாமலேயே தெரியப்படுத்தலாம். இப்போது எந்த நிறத்திற்கு என்ன அர்த்தம் என்பதைக் காண்போம். அதைப் படித்து, நாளை எந்த நிற ஆடையை அணிவது என்று நீங்களே முடிவு செய்யுங்கள்.

சிவப்பு - நான் காதலிக்கிறேன்

சிவப்பு நிறமானது காதல் மற்றும் ரொமான்ஸை குறிக்கிறது. நீங்கள் காதலர் தினத்தன்று, சிவப்பு நிற ஆடையைத் தேர்வு செய்து அணிந்தால், நீங்கள் ஏற்கனவே காதலித்து வருகிறீர்கள் என்று அர்த்தம். மற்றவர்கள் உங்களிடம் ப்ரோபோஸ் செய்யக்கூடாது என்று நினைத்தால், இந்த நிற ஆடையை அணியலாம்.

மஞ்சள் - பிரேக் அப்

உங்களுக்கு சமீபத்தில் தான் பிரேக் அப் ஆகியிருந்தால், காதலர் தினத்தன்று மஞ்சள் நிற ஆடையை தேர்வு செய்து அணியலாம். பிரேக் அப் ஆகிவிட்டால் நம்பிக்கையை இழக்காதீர்கள். உங்களை விட்டு பிரிந்தவரை விட சிறந்த நபர் உங்களுக்கு வாழ்க்கைத் துணையாக வரலாம்.

ஆரஞ்சு - ப்ரோபோஸ் செய்ய போகிறேன்

காதலர் தினத்தன்று ஆரஞ்சு நிற ஆடையை அணிய நினைக்கிறீர்களா? ஆரஞ்சு நிறமானது நீங்கள் விரும்பும் ஒருவருக்கு நீங்கள் ப்ரோபோஸ் செய்யப் போகிறீர்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. உங்களுக்கு அந்த மாதிரியான எண்ணம் இருந்தால், இந்த நிற ஆடையை அணியுங்கள்.

ப்ளூ - சுதந்திர பறவை

காதலர் தினத்தன்று நீல நிற ஆடையை அணிந்தால், அது நீங்கள் சுதந்திர பறவையாக இருக்கிறீர்கள், யார் வேண்டுமானாலும் ப்ரோபோஸ் செய்யலாம் என்பதை வெளிப்படுத்துகிறது. ஒருவேளை நீங்கள் நிச்சயமானவர் அல்லது திருமணமானவர் என்றால், நீல நிற ஆடையை அணிவதைத் தவிர்த்திடுங்கள்.

பிங்க் - ப்ரோபோஸ் ஏற்றுக் கொள்ளப்பட்டது

பிங்க் நிற ஆடையை காதலர் தினத்தன்று அணியப் போகிறீர்களா? உங்களிடம் யாரேனும் ப்ரோபோஸ் செய்துள்ளார்களா? அவர்களிடம் உங்களின் சம்மதத்தை வெளிப்படுத்த நினைக்கிறீர்களா? அப்படியானால் பிங்க் நிற ஆடையை அணியுங்கள்.

கருப்பு - ப்ரோபோஸ் மறுக்கப்பட்டது

கருப்பு நிறமானது மங்களகரமற்ற நிறமாகும். இந்த நிற ஆடையை காதலர் தினத்தன்று அணிந்தால், உங்களிடம் யாரேனும் ப்ரோபோஸ் செய்திருந்தால், அவர்களின் முன்மொழிவு ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்று அர்த்தம். காதலர் தினத்தில் இந்த நிறத்தை அணிவதால், நீங்கள் காதலில் ஆர்வம் காட்டவில்லை அல்லது தேடவில்லை என்று அர்த்தம்.

பச்சை - காத்திருக்கிறேன்

பச்சை நிறம் பசுமையைக் குறிக்கிறது. ஆனால் காதலர் தினத்தன்று பச்சை நிற ஆடையை அணிவது, காத்திருப்பதைக் குறிக்கிறது. நீங்கள் யாரிடமாவது முன்மொழிந்திருந்தாலும், அவர்கள் இன்னும் உங்களுக்கு பதில் அளிக்கவில்லை என்றால், இந்த நிறத்தைத் தேர்வு செய்யலாம். அவர்களின் பதிலுக்காக நீங்கள் இன்னும் காத்திருக்கிறீர்கள் என்பதை இது தெரியப்படுத்தும்.

வெள்ளை - ஆள் உள்ளது

ஏற்கனவே காதலித்து வந்தால் அல்லது நிச்சயதார்த்தம் ஆகியிருந்தால், வெள்ளை நிற ஆடையை அணியலாம். இந்த நிற ஆடை உங்களுக்கு ஆள் இருப்பதையும், விரைவில் திருமணம் நடக்கப் போவதையும் தெரியப்படுத்தும்.

ஊதா/கிரே - ஆர்வம் இல்லை

காதலர் தினத்தன்று, உங்களுக்கு காதலில் ஆர்வம் இல்லை என்பதை தெரியப்படுத்த விரும்பினால், அந்நாளில் ஊதா அல்லது கிரே நிற ஆடைகளை தேர்வு செய்து அணியலாம்.

Story first published: Tuesday, February 13, 2024, 22:41 [IST]
Desktop Bottom Promotion