Latest Updates
-
வார ராசிபலன்கள் (அக்டோபர் 18-24) - இந்த வாரம் 4 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் -
கர்நாடகா மட்டன் சாறு ரெசிபி - இந்த மாதிரி மட்டன் குழம்பு வைச்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
100 ஆண்டுகளாக சிக்கன் மற்றும் முட்டை சாப்பிடாத வினோத கிராமம் - ஆனா மட்டன் சாப்பிடுவாங்க - காரணம் என்ன தெரியுமா -
18 ஆண்டுக்கு பின் கேது துலாம் ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு கெட்ட நேரம் தொடங்கப்போகுதாம் -
மும்பை ஸ்டைல் சன்னா மசாலா புலாவ் ரெசிபி - இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
6 நெல்லிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
அக்டோபர் 17, 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாள் காத்திருக்காம் -
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
அக்டோபர் 28-ல் சுக்கிரன் உதயமாவதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆந்திரா ஸ்டைல் குடைமிளகாய் தக்காளி சாதம் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - பிரியாணி மாதிரி இருக்கும்
90 கோடிக்கு விற்கப்படும் அதிசய ஜூலியட் ரோஜா... அப்படி இதில் என்ன ஸ்பெஷல் தெரியுமா? ஷாக் ஆகாம படிங்க...!
Valentine's Day 2025: பிப்ரவரி மாதம் காதல் மாதம் என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் காதல் மற்றும் அன்பைக் கொண்டாடும் சிறப்பு நாட்கள் இந்த மாதம் முழுவதும் நிறைந்துள்ளது. இவை அனைத்தும் காதலர் வாரமான பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
பிப்ரவரி 7 ஆம் தேதி ரோஜா தினத்தில் தொடங்கி, அதைத் தொடர்ந்து சாக்லேட் தினம், டெடி தினம், வாக்குறுதி தினம், கட்டிப்பிடிப்பு தினம், முத்த தினம் மற்றும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தில் முடிவடைகிறது.

காதல் வாரம் மட்டுமின்றி ஆண்டு முழுவதுமே ரோஜாக்கள் காலத்தால் அழியாத அன்பின் அடையாளமாக அன்பை வெளிப்படுத்துவதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. ஒவ்வொரு நிற ரோஜாவும் ஒரு உணர்வை வெளிப்படுத்துகிறது, பொதுவாக சிவப்பு ரோஜாக்கள் காதல் உணர்வுகளை வெளிப்படுத்த காதலர்களின் மிகவும் பிரபலமான தேர்வாக உள்ளது.
ரோஜாக்கள் பல அழகான வண்ணங்களிலும், நறுமணங்களிலும் கிடைக்கின்றன. அவை வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய மலராக இருந்தாலும் காதலர் தினத்தின் போது, அவற்றின் தேவை உச்சத்தை அடைகிறது. வழக்கமாக ரூ. 20-30-க்கு விற்கப்படும் ரோஜாவின் விலை காதலர் தின வாரத்தில் ரூ. 100-1000 வரை உயரக்கூடும். ஆனால் காதலுக்கு முன்னால் பணம் பெரிதல்ல, எனவே காதலர்கள் காதலர் தினத்தின் போது செலவு செய்யத் தயங்குவதில்லை, ஏனென்றால் ரோஜா கொடுப்பது அன்பை வெளிப்படுத்தும் சின்னம் கருதப்படுகிறது.
நீங்கள் உங்கள் காதலிக்காக சில நூறுகள் அல்லது ஆயிரங்கள் செலவழித்து ரோஜாக்கள் வாங்கியிருக்கலாம், ஆனால் உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த ரோஜா எது தெரியுமா? அதன் பெயர் என்ன, அதன் விலை எவ்வளவு தெரியுமா? இந்த ரோஜாவின் விலைக்கு நீங்கள் ஒரு ஆடம்பர மாளிகையையே வாங்கி விடலாம். இந்த ரோஜா ஏன் இவ்வளவு விலைக்கு விற்கப்படுகிறது? அதன் சிறப்புகள் என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
உலகின் மிக விலையுயர்ந்த ரோஜா
உலகின் மிகவும் விலையுயர்ந்த ரோஜா ஜூலியட் ரோஜா. வழக்கமான ரோஜாக்களைப் போலல்லாமல், இதை வளர்ப்பது எளிதல்ல, இதற்கு சிறப்பு கவனிப்பு தேவைப்படுகிறது. இந்த அரிய மற்றும் நேர்த்தியான பூவை புகழ்பெற்ற பூக்கள் நிபுணர் டேவிட் ஆஸ்டின் உருவாக்கியுள்ளார், அவர் கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் பல்வேறு வகைகளை கலப்பினப்படுத்தியதன் மூலம் இதை உருவாக்கினார். பாதாமி நிற கலப்பினமாக அறியப்படும் ஜூலியட் ரோஸ் அதன் அழகு மற்றும் அரிதான தன்மைக்காக புகழ் பெற்றது. 2006 ஆம் ஆண்டில், இது 10 மில்லியன் பவுண்டுகளுக்கு (இந்திய மதிப்பில் ரூ. 90 கோடி) விற்கப்பட்டது, இது வரலாற்றில் அதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் விலையுயர்ந்த ரோஜாவாக புகழ் பெற்றது.
ஜூலியட் ரோஜாவின் சிறப்புகள்
ஜூலியட் ரோஸ் மிகவும் விலையுயர்ந்த ரோஜா மட்டுமல்ல, உலகின் மிகவும் அழகான ரோஜாக்களில் ஒன்றாகும். இது மற்ற ரோஜாக்களில் இல்லாத ஒரு தனித்துவமான நறுமணத்தைக் கொண்டுள்ளது. இன்றும் இதுதான் உலகின் விலையுயர்ந்த ரோஜாவாக உள்ளது, இதன் மதிப்பிடப்பட்ட மதிப்பு சுமார் 15.8 மில்லியன் அமெரிக்க டாலர்கள். அதன் மிகவும் கவர்ச்சிகரமான குணங்களில் ஒன்று, இது வாடாமல் அல்லது உலராமல் குறைந்தது மூன்று ஆண்டுகள் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
ஜூலியட் ரோஜாவைத் தவிர, மற்றொரு அரிய மற்றும் விலையுயர்ந்த பூ கடுபுல் மலராகும். இலங்கையில் மட்டுமே காணப்படும் இந்த மாய மலர் இரவில் மட்டுமே பூக்கும். ஆனால் உங்கள் காதலை வெளிப்படுத்த இந்த ரோஜாவைத்தான் கொடுக்க வேண்டுமென்று அவசியமில்லை. உங்களின் அன்பை வெளிப்படுத்த சாதாரண ரோஜாவே போதும்.



Click it and Unblock the Notifications

