Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
ஜூன் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் மோசமா இருக்கும்.. உஷாரா இருங்க...
Unlucky Zodiac Signs In June 2023: ஒரு புதிய மாதத்தில் நுழையும் போது, அந்த மாதம் எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள அனைவருமே விரும்புவோம். ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுவதால், ஒவ்வொரு மாதமும் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் சில மாற்றங்கள் ஏற்படும்.
அந்த வகையில 2023 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் நுழையவுள்ளோம். இந்த ஜூன் மாதத்தில் சில முக்கிய கிரகங்கள் ராசியை மாற்றவுள்ளன. கிரகங்களின் ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாகவும், சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் நிறைந்த துரதிர்ஷ்டமானதாகவும் இருக்கலாம்.

ஒருவருக்கு நடக்கவிருக்கும் நல்லதை தெரிந்து கொள்வதை விட, தீயதை முன்பே தெரிந்து கொண்டால், அசம்பாவிதத்தை தவிர்க்கலாம். இப்போது ஜூன் மாதத்தில் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும், எந்த விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் சற்று மோசமான மாதமாக இருக்கும். இந்த மாதத்தில் எந்த ஒரு முக்கியமான முடிவுகளையும் எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக தொழில் தொடர்பான எந்த முக்கிய முடிவுகளையும் எடுக்காதீர்கள்.
அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். எவ்வளவு கடினமாக உழைத்தாலும், எதிர்பார்த்த பலன் கிடைக்காது. அதற்காக துவண்டு போகாமல், பொறுமையாக இருக்க வேண்டும். நிதி நிலை சுமாராகவே இருக்கும். வருமானத்திற்கு ஏற்ப செலவுகளை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பணப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் மோசமடைவதால் கவலை அதிகரிக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் சற்று பிரச்சனைகளைத் தரக்கூடிய மாதமாக இருக்கும். இம்மாதத்தில் திடீரென்று செலவுகள் அதிகரிக்கும். இதனால் பண பிரச்சனைகளை சந்திக்க நேரிட்டு, கடன் வாங்கும் சூழல் ஏற்படும்.
தொழில் ரீதியாக சற்று நன்றாக இருக்கும். ஆனால் திருமண வாழ்க்கையில் குழப்பங்கள் அதிகரிக்கும். தவறான புரிதலால் தம்பதிகளுக்கு இடையே விரிசல் ஏற்படலாம். எனவே இந்த விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் சிரமங்கள் நிறைந்த மாதமாக இருக்கும். கூட்டு வணிகம் செய்பவர்கள், கூட்டாளருடன் பிரச்சனைகளை சந்திக்கலாம். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சில பிரச்சனைகளை சந்திக்கலாம்.
இந்த மாதத்தில் வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நிதி பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கிய பிரச்சனையால் மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம். இந்த மாதத்தில் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கைக்கு இடையே சமநிலையைப் பராமரிப்பது சிரமமாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் சவால்கள் நிறைந்த மாதமாக இருக்கும். எந்த ஒரு காரியத்திலும் எதிர்மறையான பலன்களையே பெறக்கூடும். பணிபுரிபவர்களுக்கு இம்மாதம் சற்று சிரமமாக இருக்கும். பணியிடத்தில் உங்களிடம் கொடுத்த பொறுப்புக்கள் திரும்ப பெற வாய்ப்புள்ளது.
வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. பணப் பிரச்சனையால் பல வேலைகள் தடைபடும். குடும்ப உறுப்பினர்களிடையே சண்டைகள் அதிகரிக்கலாம். ஆனால் நிதி நிலை சற்று நன்றாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சனையால் மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

