Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
திரிஷா வீட்டில் நிற்கும் சொகுசு கார்கள் என்னென்ன தெரியுமா?.. ஒவ்வொன்றும் அவ்வளவு விலை.. இதோ விவரம்
சென்னை: நடிகை திரிஷா திரைத்துறைக்கு வந்து 23 வருடங்கள் நிறைவடைந்திருக்கின்றன. இத்தனை வருடங்களில் ஏற்றங்களையும் பார்த்திருக்கிறார்; இறக்கங்களையும் பார்த்திருக்கிறார். போட்டியாக எத்தனை ஹீரோயின்கள் வந்தாலும் இன்னமும் தென்னிந்திய சினிமாவில் முன்னணி இடத்தில்தான் இருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக விடாமுயற்சி திரைப்படம் வெளியானது. அடுத்ததாக தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்நிலையில் அவரிடம் இருக்கும் கார் கலெக்ஷன் குறித்து இதில் பார்க்கலாம்.
மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் திரிஷா. அப்படத்தில் அவரது அழகையும் திறமையையும் பார்த்த திரைத்துறையினர் அடுத்தடுத்த படங்களில் ஹீரோயினாக கமிட் செய்தார்கள். ரசிகர்களும் அவரை முதல் படத்திலிருந்தே ரசிக்க தொடங்கினார்கள். முக்கியமாக தமிழ்நாட்டு ரசிகர்கள் ஹீரோயின்கள் பப்ளியாக இருந்தால்தான் ரசிப்பார்கள் என்ற பேச்சை உடைத்தது திரிஷாதான் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் பட வெற்றிக்கு பிறகு தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி நடிக்க தொடங்கினார்.

முன்னணி நடிகை: இதன் காரணமாக குறுகிய காலத்திலேயே முன்னணி ஹீரோயினாக வலம் வர ஆரம்பித்தார். ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், ரவி மோகன் என கிட்டத்தட்ட தமிழில் அத்தனை நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மொழியை போன்றே தெலுங்கிலும் அவருக்கு மார்க்கெட் சரசரவென்று உயர்ந்தது. இதன் காரணமாக அங்கும் குறிப்பிட்ட காலம் அவரது அலை பலமாகவே அடித்தது. பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்தார்தான். ஆனால் அங்கு மட்டும் அவரால் பெரிய அளவில் வெல்ல முடியவில்லை.
நோ திருமணம்: திரிஷாவுக்கு இப்போது வயது 42 வயது ஆகிறது. இன்னமும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். அதேசமயம் சில வருடங்களுக்கு முன்பு வருண் மணியன் என்ற தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் திருமணம் நடக்கவில்லை. மேலும் ராணாவுடன் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது. அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. அவரது மைண்ட் செட்டை பார்க்கையில் இப்போதைக்கு அவர் திருமணம் செய்யும் ஐடியாவிலேயே இல்லை என்றுதான் தோன்றுகிறது என ரசிகர்கள் கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.
இப்போதும் பிஸி: இடையில் அவருக்கு திரைத்துறையில் கொஞ்சம் சறுக்கல் ஏற்பட்டது. ஆனால் 96 திரைப்படம் இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடிக்க உதவியது. அந்தப் படத்திலிருந்து கடைசியாக நடித்த விடாமுயற்சி வரை திரிஷாவின் இரண்டாவது இன்னிங்ஸ் ஸ்டெடியாகவே போய்க்கொண்டிருக்கிறது. சினிமாவில் பிஸியாக இருக்கும் திரிஷா கார் கலெக்ஷனிலும் ரொம்பவே ஈடுபாடு உடையவர். இந்நிலையில் அவரிடம் இருக்கும் சொகுசு கார்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
என்ன கார்கள் இருக்கின்றன?: அதன்படி அவரிடம், பென்ஸ் எஸ் கிளாஸ் (80 லட்சம் ரூபாய்), பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் (75 லட்சம் ரூபாய்), ரேஞ்ச் ரோவர் Evoque (60 லட்சம் ரூபாய்), பென்ஸ் ஈ க்ளாஸ் (63 லட்சம் ரூபாய்) ஆகிய கார்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கார்களை அவர் தனது வீட்டில் நிறுத்தி வைத்திருக்கிறாராம். அதுமட்டுமின்றி தோன்றும்போது தனக்கு பிடித்த காரில் தனது தோழிகள் மற்றும் தோழர்களுடன் லாங் டிரைவ் போவதையும் வழக்கமாக வைத்திருக்கிறாராம்.



Click it and Unblock the Notifications