Latest Updates
-
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க - செப்டம்பர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம் -
ராஜஸ்தானி பஞ்சரத்ன பருப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
2050-ல் உலகம் சந்திக்கப்போகும் பேரழிவு - இந்தியாவிற்கு என்னென்ன பாதிப்புகள் வரப்போகுது தெரியுமா? -
செப்டம்பர் 01-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: இந்த 3 ராசிகளுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுக்கப்போகிறது -
மெட்ராஸ் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
என்னது ஒரு பசுவின் விலை 35 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பசு மாட்டில்? ஷாக் ஆகாதீங்க -
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்! -
மூட்டு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த உளுந்து கஞ்சியை தினமும் காபி, டீ-க்கு பதிலா குடிங்க..
கன்னி ராசியில் உருவாகும் திரிகிரக யோகம்: அக்டோபர் 01 முதல் இந்த 3 ராசியின் கஷ்டங்கள் தீரப்போகுது...
Trigrahi Yoga Will Form In Virgo: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும். அப்படி மாற்றும் போது சில சமயங்களில் ஒரே ராசியில் ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்களின் சேர்க்கை நிகழும். அப்படி கிரகங்களின் சேர்க்கை நிகழும் போது சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும். அப்படி உருவாகும் யோகங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் நவகிரகங்களின் தலைவனான சூரியன் கன்னி ராசியில் பயணித்து வருகிறார். அதேப் போல் கிரகங்களின் தளபதியான செவ்வாயும் கன்னி ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் கன்னி ராசியின் அதிபதியான புதன் அக்டோபர் 01 ஆம் தேதி சொந்த ராசிக்கு செல்கிறார்.

இதனால் கன்னி ராசியில் மூன்று கிரகங்களின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் சிறப்பான பலனைப் பெறப் போகிறார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
தனுசு
தனுசு ராசியின் 10 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணிபுரிபவர்கள் பதவி உயர்வையும், சம்பள உயர்வையும் பெற வாய்ப்புள்ளது.
மேலும் இந்த ராசிக்காரர்களின் விருப்பங்கள் நிறைவேறும். அக்டோபர் முதல் செய்யும் காரியங்கள் அனைத்திலும் நல்ல வெற்றி கிடைக்கும். வணிகர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். புதிய தொழிலை தொடங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். முக்கியமாக தந்தையின் ஆதரவு கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 4 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவார்கள். புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படும். தாயாரின் ஆரோக்கியம் இதுவரை மோசமாக இருந்தால், அக்டோபர் முதல் நன்றாக இருக்கும். முக்கியமாக ரியல் எஸ்டேட் தொடர்பான வேலைகளை செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 2 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக நன்றாக இருக்கும். முதலீட்டை சரியாக செய்தால், அதில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும்.
நல்ல பண வரவு கிடைக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும. வியாபாரிகளின் சிக்கிய பணம் இக்காலத்தில் கிடைக்கும். இக்காலத்தில் உங்களின் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். பேச்சால் பல காரியங்களை சாதிப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications