Latest Updates
-
சத்தான.. எலுமிச்சை இஞ்சி ரசம் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
வெறும் தோசையை விட முட்டை தோசை ஏன் சிறந்தது? - விளக்கும் டாக்டர்.பிரகாஷ்மூர்த்தி! -
ஜூன் இறுதியில் உருவாகும் அங்காரக யோகம்: டிசம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இப்படி சட்னி அரைங்க.. வீட்டுல எல்லாரும் எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
புதன் வக்ர பெயர்ச்சியால் ஜூன் இறுதியில் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
சுக்கிரன்-கேதுவின் இணைப்பால் ஜூலை மாதம் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
அடர்த்தியான தலைமுடியை பெற உதவும் செம்பருத்தி எண்ணெய் - எப்படி தயாரிக்கணும் தெரியுமா? -
இறந்தவர்கள் கனவில் வருவது அதிர்ஷ்டமா? எச்சரிக்கையா? கனவு சாஸ்திரம் கூறும் உண்மை என்ன? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அடுத்த ஜென்மம் என்னவா பிறப்பீங்க-ன்னு சொல்றோம்..
விருச்சிக ராசியில் உருவாகும் திரிகிரக யோகம்: நவம்பர் 17 முதல் இந்த 3 ராசிகளுக்கு பண மழை பொழியப்போகுது...
Trigrahi Yoga In Scorpio 2023: ஜோதிட சாஸ்திரத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும். அப்படி கிரகங்கள் ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் ஒரே ராசியில் ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒன்றாக சேர்ந்து பயணிக்கக்கூடும்.
இப்படி ஒரு ராசியில் ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்களின் சேர்க்கை நிகழும் போது, அதன் விளைவாக சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும்.அப்படி உருவாகும் யோகங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் புதன் விருச்சிக ராசிக்குள் நுழைந்தார். அதைத் தொடர்ந்து நவம்பர் 16 ஆம் தேதி செவ்வாய் விருச்சிக ராசிக்குள் நுழையவுள்ளார். அதன் பின் நவம்பர் 17 ஆம் தேதி சூரியன் விருச்சிக ராசியில் நுழையவுள்ளார். இப்படி மூன்று கிரகங்களும் நவம்பர் 17 ஆம் தேதி விருச்சிக ராசியில் இருப்பதால், மூன்று கிரகங்களின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது.
இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 4 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இந்த யோக காலத்தில் புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பெற்றோருடனான உறவு வலுவடையும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
துலாம்
துலாம் ராசியின் 2 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இந்த யோக காலமானது வரப்பிரசாதமாக இருக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையில் எதிர்பாராத பல நல்ல மாற்றங்கள் ஏற்படும். பேச்சால் பல காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.
மகரம்
மகர ராசியின் 11 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலையில் உயர்வு ஏற்படவுள்ளது. நிறைய பணத்தை சேமிக்க முடியும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு இக்காலம் நன்றாக இருக்கும். வீட்டிற்கு விருந்தினர்களின் வருகை சற்று அதிகமாக இருக்கும். இக்காலகட்டத்தில் பழைய நண்பர்களின் உதவியால் பெரிய பிரச்சனை ஒன்று தீர்க்கப்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications