Latest Updates
-
நீர் தோசையும், தண்ணி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 25 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கவலைகளும், தோல்வியும் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் 25-ல் சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேது-சூரிய சேர்க்கையால் அடுத்த 24 நாட்கள் இந்த 3 ராசிக்கு வாழ்க்கை நரகமா இருக்கும்.. -
மணத்தக்காளி கீரை கடையல் ரெசிபி - கீரையை இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இதுல உங்களுக்கு பிடிச்ச பழம் என்னன்னு சொல்லுங்க.. உங்களோட பலம் என்னன்னு சொல்றோம்.. -
ஒரு மணி நேரம் ஏன் 60 நிமிடங்களாக பிரிக்கப்பட்டுள்ளது? 100 நிமிடமாக என் பிரிக்கப்படவில்லை தெரியுமா? -
யாரும் பேசாத குடும்ப நல்வாழ்வு போக்கு: நிதித் தயார்நிலை -
September Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. செப்டம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
செப்டம்பர் மாதத்தில் பல கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 துரதிர்ஷ்டமான ராசிகள் என்னென்ன தெரியுமா?
5 ஆண்டுகளுக்கு பின் தனுசு ராசியில் நிகழும் திரிகிரக யோகம்: இன்று முதல் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்
Trigrahi Yoga In Sagittarius After 5 Years: வேத ஜோதிடத்தின் படி, மனித வாழ்க்கையில் கிரகங்களின் இயக்கங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதுவும் கிரகங்களின் ராசி மாற்றங்களின் போது நிகழும் யோகங்கள் அவ்வப்போது வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன.
அந்த வகையில் டிசம்பர் 27 ஆம் தேதி தனுசு ராசியில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. ஏற்கனவே தனுசு ராசியில் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியனும், கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதனும் பயணித்து வருகின்றனர். இந்நிலையில் டிசம்பர் 27 ஆம் தேதி செவ்வாயும் தனுசு ராசியில் நுழைவதால், இந்த ராசியில் 3 கிரகங்களின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது.

இந்த யோகமானது ஒரு சுப யோகம் என்பதால் சில ராசிக்காரர்களுக்கு இந்த யோகமானது சிறப்பான பலன்களை அளிக்கவுள்ளது. அதுவும் 3 ராசிக்காரர்கள் திரிகிரக யோகத்தால் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணப் போகிறார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்
மேஷம்
மேஷ ராசியின் 9 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரிய வெற்றியைப் பெறக்கூடும். சிலர் வேலை தொடர்பாக வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்வதற்கான வாய்ப்புள்ளது. இக்காலத்தில் நீங்கள் போடும் திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறும். ஒவ்வொரு விஷயத்திலும் சாதகமான முடிவுகளைப் பெறுவீர்கள்.
தனுசு
தனுசு ராசியின் முதல் வீட்டில் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. இதனால் இநத ராசிக்காரர்களின் தைரியம் அதிகரிக்கும். பொருள் வசதிகளில் நாட்டம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு மேம்படும். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு இக்காலத்தில் நல்ல வேலை கிடைக்கும். வணிகம் செய்து வருபவர்களுக்கு பெரிய லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவார்கள். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
துலாம்
துலாம் ராசியின் 3 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகிவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை உயரப் போகிறது. தைரியம் அதிகரிக்கும். வெளிநாட்டு தொடர்பான வியாபாரம் செய்பவர்கள் இக்காலத்தில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். மாணவர்களுக்கு இக்காலம் சிறப்பாகவும் சாதகமாகவும் இருக்கும். படிப்பை முடித்து வேலையை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு இக்காலத்தில் நல்ல வேலை கிடைக்கும். முக்கியமாக உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications