Latest Updates
-
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் குரு மங்கள யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
நவராத்திரிக்கு பின் உருவாகும் இரட்டை ராஜயோகத்தால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா சூப்பரா இருக்கும் -
வாஸ்துப்படி அதிர்ஷ்டத்தை ஈர்க்க இந்த ஓவியங்களை வாங்கி வீட்டுல வையுங்க.. பண கஷ்டமே வராது! -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரியும், 2 முட்டையும் இருந்தா.. நைட் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்.. -
Skin Care: இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுவது அதிக முகப்பருக்களை ஏற்படுத்துமாம் - கவனமா சாப்பிடுங்க -
இந்த 4 ராசி ஆண்கள் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்று வாழும் நேர்மையான கணவராக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்டோபர் 24-ல் வக்ரமடையும் புதன்: இந்த 5 ராசிக்காரங்க பேச்சால் பல பிரச்சனைகளை சந்திப்பாங்க.. உஷார்.. -
உங்கள் பழைய வெள்ளி நகைகளை செலவே இல்லாமல் வீட்டிலேயே புதிது போல மாற்றும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்கள பத்தி சொல்றோம்..
5 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரல் 09 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கும்..
Trigrahi Yoga In Pisces 2024: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும். அவ்வாறு ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்களுடன் இணைந்து ஒரே ராசியில் பயணிக்க நேரிடும். இந்நிலையில் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது.
அந்த வகையில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் மீன ராசிக்கு வக்ர நிலையில் நுழைந்து பயணிக்கவுள்ளார். இந்நிகழ்வானது ஏப்ரல் 09 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த மீன ராசியில் ஏற்கனவே சுக்கிரனும், சூரியனும் பயணித்து வருகின்றனர். இதனால் மீன ராசியில் புதன், சுக்கிரன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. அதுவும் 5 ஆண்டுகளுக்கு பின் இந்நிகழ்வு மீனத்தில் நிகழவுள்ளது.

இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இருப்பினும் 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளார்கள். குறிப்பாக எடுத்த காரியங்களில் வெற்றிகளையும், நல்ல லாபத்தையும் காணவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த காலத்தில் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. வணிகர்கள் நல்ல நிதி நன்மைகளைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். இதனால் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மேலும் பரம்பரை சொத்துக்களால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். முக்கியமாக இக்காலத்தில் உங்களின் செயல்திறனில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.
கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நம்பிக்கை அதிகரிக்கும். தொழிலதிபர்கள் இக்காலத்தில் நல்ல செய்திகளைப் பெறுவார்கள். வேலை மற்றும் வியாபாரம் தொடர்பாக நிறைய பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்கள் நல்ல நிதி நன்மைகளைத் தருவதாக இருக்கும். மேலும் சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்க வேண்டியிருக்கும். இக்காலத்தில் வருமானத்தை அதிகரிக்க பல புதிய வாய்ப்புக்கள் தேடி வரும். மாணவர்கள் இக்காலத்தில் தேர்வுகளை சிறப்பாக எழுதுவார்கள்.
மகரம்
மகர ராசியின் 3 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தைரியம் அதிகரிக்கும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள். முக்கியமாக இக்காலத்தில் கடின உழைப்புக்கான பலனைப் பெறக்கூடும். உங்களின் வேலைக்கு சரியான அங்கீகாரம் பணியிடத்தில் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
