Latest Updates
-
சன்டே ஸ்பெஷல் ஹனி கார்லிக் சிக்கன் - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
அடுத்த 6 மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழில் மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்.. -
Actor Bhagyaraj Death: வாக்கிங் சென்ற பின் காலமான நடிகர் பாக்யராஜ்! உண்மையில் வாக்கிங் மாரடைப்பை ஏற்படுத்துமா? -
சத்தான.. எலுமிச்சை இஞ்சி ரசம் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
வெறும் தோசையை விட முட்டை தோசை ஏன் சிறந்தது? - விளக்கும் டாக்டர்.பிரகாஷ்மூர்த்தி! -
ஜூன் இறுதியில் உருவாகும் அங்காரக யோகம்: டிசம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இப்படி சட்னி அரைங்க.. வீட்டுல எல்லாரும் எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
புதன் வக்ர பெயர்ச்சியால் ஜூன் இறுதியில் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
சுக்கிரன்-கேதுவின் இணைப்பால் ஜூலை மாதம் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
துலாம் ராசியில் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..
Trigrahi Yoga In Libra On October 2023: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அப்படி உருவாகும் யோகங்களின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் ஏற்கனவே கேதுவும், செவ்வாயும் துலாம் ராசியில் பயணித்து வருகிறார்கள். அத்துடன் அக்டோபர் 18 ஆம் தேதி சூரியன் துலாம் ராசிக்குள் நுழைந்தார். இதனால் துலாம் ராசியில் மூன்று கிரகங்களின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது.

இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இவர்களுக்கு பண இழப்புக்கள் ஏற்படலாம் மற்றும் ஆரோக்கியம் மோசமடைய வாய்ப்புள்ளது. இப்போது துலாம் ராசியில் உருவாகியுள்ள திரிகிரக யோகத்தால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 7 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் மோசமடையக்கூடும். சிலருக்கு விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. நிதி விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக முதலீடு செய்யும் எண்ணம் இருந்தால், அதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. அதோடு எந்த ஒரு முக்கியமான பணிகளையும் இக்காலத்தில் தொடங்கிவிடாதிர்கள். இல்லாவிட்டால் இழப்புக்களை சந்திக்க நேரிடும்.
துலாம்
துலாம் ராசியின் முதல் வீட்டில் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. இதனால் இக்காலத்தில் திருமணமான தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் மோசமடையக்கூடும். சிலருக்கு பண இழப்பு ஏற்படலாம். கூட்டு வணிகம் செய்பவர்களுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலரது முக்கியமான வேலைகள் பாதியில் நிறுத்தப்படலாம். எதற்கெடுத்தாலும் அதிகம் டென்சனாவீர்கள். விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
மிதுனம்
மிதுன ராசியின் 5 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் குழந்தைகளால் சிக்கல்களை சந்திக்க நேரிடும். கர்ப்பிணிப் பெண்கள் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. காதலிப்பவர்கள் தங்கள் காதலில் வெற்றி பெறுவார்கள். பணத்தை முதலீடு செய்ய நினைத்தால், அதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications