Latest Updates
-
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும்
5 ஆண்டுகளுக்கு பின் விருச்சிகத்தில் உருவாகியுள்ள திரிகிரக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்!
Trigrahi Yoga Formed In Scorpio: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலத்தில் ராசியை மாற்றும் போது, சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அப்படி உருவாகும் யோகங்கள் ஒவ்வொன்றும் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் நவகிரகங்களின் தலைவனான சூரியனும், தளபதியான செவ்வாயும், இளவரசனான புதனும் விருச்சிக ராசியில் ஒன்றாக பயணிக்கின்றனர். இதனால் விருச்சிக ராசியில் மூன்று கிரகங்களின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. இந்த திரிகிரக யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

இருப்பினும் 3 ராசிக்காரர்கள் இந்த திரிகிரக யோகத்தால் திடீர் பணவரவைவும், அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வெற்றி மேல் வெற்றியையும், முன்னேற்றத்தையும் பெறவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
மகர ராசியின் வருமானம் மற்றும் லாப வீட்டில் இந்த யோகம் உருவாகியுள்ளது. இதனால் மகர ராசிக்காரர்களுக்கு இந்த திரிகிரக யோகத்தால் வருமானத்தில் உயர்வு ஏற்படலாம். ஆனால் வேலையில் வெற்றி பெற சற்று கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
மேலும் நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்களும் கிடைக்கும். சூரியனின் அருளால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் மீண்டும் தொடங்கக்கூடும். முதலீடுகளை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு திரிகிரக யோகமானது சாதகமான பலன்களை வழங்கும். முக்கியமாக தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத நன்மைகளைப் பெறக்கூடும். சிலருக்கு புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் சிறப்பான செயல்திறனால் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவார்கள். தந்தையுடனான உறவு சிறப்பாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு திரிகிரக யோகத்தால் எதிர்பாராத சில நல்ல பலன்கள் கிடைக்கும். புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆரோக்கிய பிரச்சனையால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தால், இந்த யோகத்தால் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
தொழில் செய்பவர்கள் சில சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். ரியல் எஸ்டேட் தொடர்பான வேலையை செய்பவர்களுக்கு, இக்காலத்தில் நிறைய லாபம் கிடைக்கும். இதுவரை தாயுடன் பிரச்சனையைக் கொண்டிருந்தால், இந்த யோகத்தால் தாயாருடன் இருந்த பிரச்சனை நீங்கி, அவருடனான உறவு மேம்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications