Latest Updates
-
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
கடகத்தில் குரு-சந்திர சேர்க்கையால் உருவாகியுள்ள கஜகேசரி ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்..
100 ஆண்டுகள் கழித்து ரிஷபத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: மே 19 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்
Trigrahi Yog In Taurus 2024: ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றங்கள் மற்றும் கிரகங்களின் சேர்க்கைகளால் சில சமயங்களில் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும். அப்படி உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் மங்களகரமான யோகமான திரிகிரக யோகம் ரிஷப ராசியில் உருவாகவுள்ளது.
திரிகிரக யோகம் என்பது மூன்று கிரகங்களின் சேர்க்கைகளால் உருவாகக்கூடிய ஒரு சுப யோகமாகும். இந்த யோகம் மே 19 ஆம் தேதி உருவாகவுள்ளது. அதுவும் ரிஷப ராசியில் சூரியன், குரு, சுக்கிரன் ஆகிய கிரகங்களின் சேர்க்கைகளால் உருவாகவுள்ளது. அதுவும் சுமார் 100 ஆண்டுகளுக்கு பின் இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கைகளால் ரிஷப ராசியில் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது.

இந்த யோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. குறிப்பாக தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட போகிறது. இப்போது ரிஷபத்தில் உருவாகும் திரிகிரக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் முதல் வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். தொழில் வேகமாக வளரும். வணிகர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். திருமணமானவர்களின் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். தம்பதிகளுக்கு இடையே பிணைப்பு அதிகரிக்கும். முக்கியமாக உங்களின் வாழ்க்கைத் துணையும் தங்கள் தொழிலில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலையை மாற்ற நீண்ட நாட்களாக நினைத்தால், பல புதிய வேலை வாய்ப்புக்கள் தேடி வரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும். இக்காலத்தில் செய்யப்படும் முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
கடகம்
கடக ராசியின் 11 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படவுள்ளது. புதிய வருமான ஆதாரங்கள் உருவாகலாம். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்க நேரிடும். வேலை தொடர்பான பயணங்களை அதிகம் மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்கள் நல்ல நிதி ஆதாயங்களைத் தருவதாக இருக்கும். நிதி நிலை மேம்படும் மற்றும் சேமிப்பு அதிகரிக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
