Latest Updates
-
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்..
30 ஆண்டுகளுக்கு பின் கும்பத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு...
Trigrahi Yog In Aquarius on February 2024: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றங்களின் போது சில சமயங்களில் ஒரே ராசியில் ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்களின் சேர்க்கைகள் நிகழும். அப்படி கிரக சேர்க்கைகள் நிகழும் போது சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகக்கூடும். அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் நீதிமான் சனி பகவான் தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் 30 ஆண்டுகளுக்கு பின் பயணித்து வருகிறார். இந்நிலையில் சூரியனும், புதனும் பிப்ரவரியில் கும்ப ராசியில் நுழையவுள்ளனர். இப்படி கும்ப ராசியில் இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது.

இந்த கிரக சேர்க்கையானது 30 ஆண்டுகளுக்கு பின் கும்ப ராசியில் நிகழ்கிறது. இதனால் பல ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளார்கள். இப்போது கும்ப ராசியில் உருவாகும் திரிகிரக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒரு பெரிய அதிசயம் நடக்கவுள்ளது. தொழிலில் எதிர்பாராத பல நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது. சிலருக்கு வெளிநாட்டில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கை திருப்திகரமாக இருக்கும்.
பணிபுரிபவர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றை பெறலாம். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சிலர் புதிய தொழிலைத் தொடங்கலாம். நிதி நிலை வலுவாக இருக்கும். பரம்பரை சொத்துக்களால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். வெளிநாட்டில் சொத்து வாங்க வேண்டுமென்ற கனவு நிறைவேறும். வியாபாரிகள் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
பணிபுரிபவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். சிலர் சிறப்பான செயல்திறனால் பதவி உயர்வு, சம்பள உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. வணிகர்களும் நல்ல ஒப்பந்தத்தைப் பெறுவார்கள். பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். நிதி ரீதியாக, நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். கடின உழைப்பால் நிறைய பணத்தை சம்பாதிப்பீர்கள். உறவுகளைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள். எந்த ஒரு வேலையிலும் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் நல்ல வெற்றியும் லாபமும் கிடைக்கும். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். இதனால் ஏராளமான நிதி நன்மைகளைப் பெறுவீர்கள்.
பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். முக்கியமாக பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாட்டில் வியாபாரம் செய்பவர்கள் இருமடங்கு லாபத்தைப் பெறுவார்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு இந்த யோகத்தால் பணக்காரராகவும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications