Latest Updates
-
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம்
மீன ராசியில் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் ஜொலிக்கப் போகுது..
மீன ராசியில் குரு, புதன் மற்றும் சூரியன் ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்றாக பயணிக்கின்றன. இதனால் மீன ராசியில் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது.
வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ராசியை அவ்வப்போது மாற்றும். அப்படி ராசியை கிரகங்கள் மாற்றும் போது சில சமயங்களில் கிரகங்களின் சேர்க்கைகள் நிகழ்வதுண்டு. இந்த கிரக சேர்க்கைகளால் யோகங்கள் உருவாகும்.
இப்படி உருவாகும் யோகங்கள் சில சமயங்களில் சுப யோகங்களாகவோ அல்லது அசுப யோகங்களாகவோ இருக்கலாம். அதனால் சில ராசிக்காரர்களுக்கு நன்றாகவோ அல்லது மோசமாகவோ இருக்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில் மீன ராசியில் குரு, புதன் மற்றும் சூரியன் ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்றாக பயணிக்கின்றன. இதனால் மீன ராசியில் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகமானது மார்ச் 31 வரை நீடித்திருப்பதால், இதற்கு இடைப்பட்ட காலகட்டமானது சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாகவும், நல்ல பண வரவு கிடைக்கக்கூடிய காலமாகவும் இருக்கும்.
இப்போது மீன ராசியில் உருவாகியுள்ள திரிகிரக யோகத்தால் எந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் ஜொலிக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 5 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் இக்காலகட்டத்தில் திடீர் பண வரவைப் பெறுவார்கள். தொழிலில் நல்ல வெற்றியும், முன்னேற்றமும் ஏற்படும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்து இனிமையாக இருக்கும். மாணவர்கள் இக்காலத்தில் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். தேர்வுகளில் சிறப்பாக செயல்பட முடியும்.

மீனம்
மீன ராசியின் முதல் வீட்டில் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. இதனால் மீன ராசிக்காரர்களின் ஆளுமையில் நல்ல மாற்றம் ஏற்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். கூட்டு தொழில் செய்ய வேண்டுமென்ற ஆசை இருந்தால், அதை இக்காலத்தில் தொடங்கினால் அற்புதமாக இருப்பதோடு, நல்ல லாபமும் கிடைக்கும். மேலும் இக்காலத்தில் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல திருமண வரன் கிடைக்க வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் இக்காலத்தில் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.

தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் அனைத்துவிதமான சுகங்களையும் பெறுவார்கள். தாயாருடனான உறவு மேம்படும். தாயிடம் இருந்து நன்மைகள் கிடைக்கும். வாகனம் வாங்கும் யோகம் உருவாகும். புதிய சொத்து வாங்குவது பற்றிய யோசனை எழும் மற்றும் அதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். ஏழரை சனியில் இருந்து விடுபட்டிருப்பதால், இதுவரை தடைபட்டு வந்த வேலைகள் அனைத்தும் தடையின்றி வெற்றிகரமாக முடிக்கப்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications