Latest Updates
-
அஸ்தமன நிலையில் புதன்! அடுத்த 3 வாரங்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
ராகு-கேது பெயர்ச்சியால் டிசம்பர் மாதம் வரை நரகத்தை அனுபவிக்கப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வரகரிசியும், வாழைப்பழமும் இருந்தா இந்த ஆரோக்கியமான பணியாரத்தை செய்யுங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும் -
பார்லர் போகாமலேயே முகத்தில் வளரும் முடியை நீக்கணுமா? இந்த 5 ஃபேஸ் பேக்கை போடுங்க போதும்.. -
ஆகஸ்ட் கடைசியில் நடக்கும் சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களின் வேலையில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும்! -
செப்டம்பரில் இரண்டு முறை ராசி மாறும் புதன்: சகல சௌபாக்கியத்தை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
1 கப் ரவையும், 1 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. அள்ளும்.. -
கழிப்பறையில் ஐஸ் கட்டிகளை கொட்டுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தமாம்.. எச்சரிக்கும் எய்ம்ஸ் டாக்டர்! -
இட்லி அரிசியும், அப்பளமும் இருந்தா இந்த கேரளா ஸ்டைல் அப்பள வடையை செய்யுங்க - வேற லெவலில் இருக்கும்
50 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
Trigraha Yog In Pisces 2024: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றங்களின் போது, சில சமயங்களில் ஒரே ராசியில் ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒன்றிணைந்து பயணிக்கும். அப்படி கிரகங்கள் ஒன்றிணையும் போது சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும். அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கமானது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
அந்த வகையில் நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் ஏப்ரல் 9 ஆம் தேதி மீன ராசியில் நுழைந்தார். ஏற்கனவே இந்த மீன ராசியில் சூரியனும், சுக்கிரனும் பயணித்து வருகின்றனர். இந்நிலையில் புதனும் சென்றிருப்பதால், திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. இந்த மூன்று கிரகங்களால் உருவாகியுள்ள திரிகிரக யோகமானது சுமார் 50 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ளது. இதனால் இந்த யோகமானது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.

மேலும் இந்த யோகத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும் 3 ராசிக்காரர்களுக்கு இந்த யோகத்தால் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும், அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வெற்றியும், லாபமும் கிடைக்கும். இப்போது மீன ராசியில் உருவாகியுள்ள திரிகிரக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத பண வரவுகளைப் பெறுவார்கள். வேலை தேடிக் கொண்டிருந்தால், நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். இக்காலத்தில் உங்களின் பேச்சு மற்றவர்களை கவரும் படி இருக்கும். பேச்சால் பல வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழிலதிபர்கள் சிக்கிய பணத்தைப் பெறுவார்கள்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். தொழிலில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிதி ரீதியாக வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை மிகவும் சிறப்பாக இருக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
மீனம்
மீன ராசியின் முதல் வீட்டில் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுபெறும். வருமானத்தை அதிகரிக்க மேற்கொள்ளும் முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும். சில புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. திருமணமாகாதவர்களுக்கு இக்கால கட்டத்தில் மனதிற்கு பிடித்த வாழ்க்கை துணை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications