Latest Updates
-
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்! -
மூட்டு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த உளுந்து கஞ்சியை தினமும் காபி, டீ-க்கு பதிலா குடிங்க.. -
செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போறாங்க.. -
உங்ககிட்ட இந்த 5 காலை பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. அது உடம்பில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும்! -
டக்குன்னு சமையலை முடிக்கணுமா? அப்ப தயிர் இருந்தா, 10 நிமிஷத்துல இப்படி குழம்பு செய்யுங்க.. -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் குருபகவான்: அக்டோபர் முதல் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் தீர போகுது! -
இன்றைய ராசிபலன் 29 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
பூரிக்கு ஒருவாட்டி இந்த பக்குவத்துல உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
செப்டம்பர் 01-ல் சனி-குருவால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: தொழிலில் அபார வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிகள்! -
சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் அக்டோபர் வரை ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா?
துலாம் ராசியில் உருவாகும் திரிகிரக யோகம்: அக்டோபர் 15 முதல் இந்த 3 ராசிக்கு திடீர் பண வரவு கிடைக்கும்..
Trigraha Yog In Libra 2023: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் அவ்வப்போது ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறிக் கொண்டே இருக்கும். அப்படி கிரகங்கள் ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் ஒரே ராசியில் ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்களின் சேர்க்கை நிகழும். இந்த கிரக சேர்க்கைகளால் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகக்கூடும். இப்படி உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் காணப்படும்.
அந்த வகையில் அக்டோபர் 3 ஆம் தேதி செவ்வாய் துலாம் ராசிக்குள் நுழைந்தார். இந்த துலாம் ராசியில் ஏற்கனவே கேது பயணித்து வருகிறார். இந்நிலையில் அக்டோபர் 15 ஆம் தேதி சந்திரன் துலாம் ராசிக்குள் நுழையவுள்ளார்.

இதனால் துலாம் ராசியில் செவ்வாய், கேது மற்றும் சந்திரனின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகமானது 2 1/2 நாட்கள் வரை நீடித்திருப்பதால், இக்காலத்தில் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத வகையில் பணவரவு கிடைக்கும். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 5 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். அதுவும் பங்குச் சந்தையுடன் தொடர்புடையவர்கள் நல்ல லாபத்தைப் பெறக்கூடும். போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் பெரிய வெற்றியைக் காண்பார்கள்.
வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். சிலர் வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். சிலருக்கு நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
கன்னி
கன்னி ராசியின் 2 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் பணிபுரிபவர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றைப் பெறலாம். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
நிதி ரீதியாக, இக்காலத்தில் எதிர்பாராத பண வரவைப் பெறக்கூடும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்க முடியும். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 11 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல நிதி பலன்களைப் பெறுவார்கள். அதோடு இந்த ராசிக்காரர்களின் ஆசைகள் நிறைவேறும். பணிபுரிபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும்.
வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். சிலருக்கு வெளிநாட்டில் இருந்து நல்ல நிதி நன்மைகள் கிடைக்கலாம். பங்குச் சந்தையில் இருப்பவர்களுக்கு நல்ல நிதி பலன்கள் கிடைக்கும். கூட்டு வணிகம் செய்பவர்களுக்கு, இக்காலம் மிகவும் நன்றாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications