இந்த 5 ராசிக்காரங்க உயிரே போனாலும் அவங்க செஞ்ச தப்பை மட்டும் ஒத்துக்க மாட்டாங்களாம்... உங்க ராசி என்ன?

மனிதராக பிறந்த அனைவருமே வாழ்க்கையில் தவறு செய்வது இயல்பான ஒன்றுதான். ஆனால் அந்த தவறை திருத்திக் கொள்வதும், அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதும் மனிதர்களின் இயல்புதான். பெரும்பாலும் மக்கள் தாங்கள் செய்த தவறுகளை ஒப்புக்கொள்வார்கள்.

ஆனால் சிலர் தங்கள் தவறுகளை ஒப்புக்கொள்வது மற்றவர்களை விட கடினமாக இருப்பதை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? அவர்கள் எப்போதும் தங்கள் தவறை ஒப்புக்கொள்ள மாட்டார்கள் மற்றும் தங்கள் தவறுக்காக மற்றவர்கள் மீது பழிசுமத்துவார்கள்.

Top 5 Zodiac Signs Who Never Admit Their Mistakes in Tamil

மனிதர்களின் இந்த வினோதமான நடத்தைக்கு அவர்களின் பிறந்த ராசி ஒரு முக்கிய காரணாமாக இருக்கலாம். மன்னிப்பு கேட்பதோ அல்லது தங்கள் தவறை ஒப்புக்கொள்வதோ அவர்களின் அகராதியிலேயே இருக்காது. இந்த பதிவில் எந்தெந்த ராசிகள் இப்படி பிடிவாதமாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

சிம்மம்

வலிமைமிக்க சூரியனால் ஆளப்படும் நம்பிக்கையான சிம்ம ராசிக்காரர்களுக்கு, பெரும்பாலும் தவறுகளை ஒப்புக்கொள்வது மிகவும் கடினமான பணியாக இருக்கும். அவர்களின் கம்பீரமான நடத்தை அவர்களை தவறு செய்ய முடியாதவர்களாக நினைக்க வைக்கலாம்.

சிம்ம ராசிக்காரர்கள் மிகவும் தன்னம்பிக்கை உடையவர்கள் மற்றும் அவர்களின் செயல்களின் மீது பெருமை கொள்கின்றனர். இருப்பினும், தற்பெருமையே அவர்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய தடையாக மாறும், இது அவர்கள் தங்கள் தவறுகளை ஒப்புக்கொள்வதைத் தடுக்கிறது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் அவர்களின் தீவிரம் மற்றும் உறுதிப்பாட்டிற்கு பெயர் பெற்றவர்கள், அவர்கள் தங்கள் தவறை ஒப்புக்கொள்ளும் போது மிகவும் சிரமமாக உணரலாம். அவர்களின் சக்திவாய்ந்த பார்வை மற்றும் கவர்ச்சியான வசீகரத்தால், அவர்கள் தங்கள் தவறான செயல்களை எளிதாக மறைக்க முடியும்.

அவர்களின் புகழ் வெளிச்சம் குறையுமோ என்ற பயமும், பரிபூரணவாதியாக இருப்பதற்கான விருப்பமும் அவர்களை ஒருபோதும் தங்கள் தவறுகளை ஒப்புக்கொள்ள அனுமதிக்காது. இது அவர்களை ஆணவக்காரர்களாக தோற்றமளிக்க வைக்கிறது.

மகரம்

மகர ராசிக்காரர்கள், விடாமுயற்சியும், ஒழுக்கமும் உள்ளவர்கள், தங்கள் தவறுகளை ஒப்புக்கொள்ள அவர்கள் பெரும் போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும். அவர்கள் தங்களின் செயல்கள் மீது அதீத நம்பிக்கைக் கொண்டவர்கள், அவர்கள் தங்களுக்கு வகுத்த பாதையிலிருந்து விலகி செல்வதை எப்போதும் விரும்புவதில்லை.

மகர ராசிக்காரர்கள் வெற்றிக்கு தேவையான வியர்வை மற்றும் உழைப்பைப் பற்றி நன்கு அறிந்தவர்கள், மேலும் தவறுகளை ஒப்புக்கொள்வது அவர்களின் சாதனைகளை மறக்கடிக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

பொறுப்பாகவும் நம்பகத்தன்மையுடனும் இருப்பதற்கான அவர்களின் அர்ப்பணிப்பு சில சமயங்களில் அவர்களின் தவறை ஏற்றுக்கொள்ளத் தயங்க வைக்கிறது.

கும்பம்

சுதந்திரமான மற்றும் புதுமையான எண்ணம் கொண்டவர்கள் கும்ப ராசிக்காரர்கள். அவர்கள் வழக்கத்திற்கு மாறான கருத்துக்கள் மற்றும் முற்போக்கான சிந்தனைகளை சுமப்பவர்களாக இருந்தாலும், தவறுகளை ஒப்புக்கொள்வது எப்போதும் அவர்களின் குணமாக இருக்காது. அவர்களின் தனித்துவமான கண்ணோட்டங்கள் மிகவும் புகழ்பெற்றவை.

மற்றவர்கள் சரியென்று கூறும் விஷயங்களை அவர்கள் தவறென்று கருதினால் அதனை பிடிவாதமாக வலியுறுத்துவார்கள். சில சமயங்களில் மற்றவர்கள் தவறென்று நினைக்கும் விஷயங்களை சரியென்று அடைப்பிடிப்பார்கள்.

அவர்களின் சுதந்திரம் மற்றும் அவர்களின் சொந்த கருத்து மீதான நம்பிக்கை அவர்களை தவறுகளை ஒப்புக்கொள்வதில் இருந்து விலக்கி வைக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, தவறை ஒப்புக்கொள்வது அவர்களின் தரத்தைக் குறைப்பதாக அவர்கள் கருதுகிறார்கள்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் தைரியமான மற்றும் உமிழும் மனப்பான்மைக் கொண்டவர்கள். அவர்களின் சாகச மனப்பான்மையும், போட்டி குணமும் சில சமயங்களில் தவறுகளை ஒப்புக்கொள்வதில் குறுக்கே நிற்கலாம்.

மேஷ ராசிக்காரர்கள் பெரும்பாலும் வாழ்க்கையை ஒரு போர்க்களமாகப் பார்க்கிறார்கள், எனவே அதில் தவறை ஒப்புக்கொள்வது பலவீனத்தின் அறிகுறியாகக் கருதப்படுகிறது.

வழிநடத்துவதற்கும், வெற்றி பெறுவதற்கும் அவர்களின் உள்ளார்ந்த ஆசை, அவர்களை நேருக்கு நேர் எதிர்கொள்வதற்குப் பதிலாக, தவறுகளை மறைக்கத் தூண்டுகிறது.

Story first published: Tuesday, August 8, 2023, 12:15 [IST]
Desktop Bottom Promotion